வியாழன், 10 ஜூன், 2010

அமரர் ஜீவராஜனின் பூதவுடல் அக்னியுடன் சங்கமமாகியது.







அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜனின் பூதடல் சற்று நேரத்துக்கு முன்பு அக்னியுடன் சங்கமமாகியது.
மலையக உயர்க்கல்வித்துறைக்கு முக்கிய பங்காற்றியவர்களின் ஒருவராக கருதப்படுகின்ற அமரர் ஜீவராஜனின் பூதவுடல் இன்று பிற்பகல் 2.30 மணிவரை அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி வளாகத்தில் ஹைலன்ஸ் கல்லூரி சமூகத்தின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதன் போது இடம் பெற்ற இரங்கல் உரைநிகழ்வில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழை பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் அட்டன் நகரூடாக கொட்டகலை கொமர்ஷல் மின்சார தகன மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 5.20 அன்னாரின் பூதவுடல் அக்னியுடன் சங்கமமாகியது.

அமரர் ஜீவராஜனின் இறுதிக்கிரியைகள் இன்று









மலையகத்தமிழ்க் கல்வித்துறைக்கு மிக குறுகிய காலத்தில் மிகப்பெரும் சாதனையை நிலைநாட்டிய ஜீவராஜனின் மறைவு மலையக கல்வித்துறையில் நிரப்பமுடியாத பெரும் இடைவெளியை ஏற்படத்தியிருக்கின்றது அவர் தெரிவித்தார். இதே வேளை மத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் எஸ்சிவப்பிரகாசம் ,ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.தேவசிகாமணி உட்பட பலர் அமரர் ஜீவராஜனுக்கு அனுதாபச்செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
ஆசிரியர் ஜுவராஜனின் பூதவுடல் இன்று நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் சமூகத்தின் அஞ்சலிக்காக இந்தக்கல்லூரியில் வைக்கப்படுமென்றும் அதனைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுமென்றும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர்
எஸ்.விஜயசிங் தெரிவித்தார்.