வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதி செய்து கொள்வதற்கு இனரீதியான வாக்களிப்பு முறை அவசியம் : எஸ்.முருகையா



மலையகத்தில் இனரீதியான வாக்களிப்பு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாகவே தமிழ் மக்கள் சார்பான அரசியல் பிரதிநிதித்துவத்தினை உள்@ராட்சி மன்றங்களில் உறுதி செய்து கொள்ள முடியுமென்று அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் எஸ்முருகையா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். :இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1948 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க பிரஜாஉரிமை சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் வாக்குரிமையற்று வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டுக்குப்பின்பு இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் வாக்குரிமையைப்பெற்றுக்கொண்ட போதும் பெரும்பான்மையினக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் எமது மக்கள் சார்பான அரசியல் பிரதிநிதித்துவம் படிப்படியாக இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எமது வாக்குளால் பெருபான்மைக்கட்சிகள் வெற்றிப்பெறுகின்ற போதிலும் எமது தமிழ் பிரதிநிதித்தவம் இல்லாமல் செய்யப்படுகின்றது.இதனை நாம் தற்போது நடைமுறையில் உணர்ந்துள்ளோம்.எனவே எதிர்வரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் பஸ்பாகை கோரளை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளும் வகையில் மண்வெட்டி சின்னத்தில் எமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். பெருபான்மையினக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் எமது தனித்துவம் இழக்கப்படுவதோடு எமது அரசியல் பிரதிநிதித்துவத்தினையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இந்தத் தேர்தலில் நாம் இனரீதியான வாக்களிப்பு முறை ஒன்றினை கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும்.இதே வேளை எமது நாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் பெண்களாவர்.அத்துடன் தொழிற்துறையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களும் பெண்களாவர்.எனினும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே உள்ளது.எனவே இதனைக்கருத்திற்கொண்டு இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேடபாளர்களை வெற்றிப்பெறச்செய்வது எமது சமூகக் கடமையாகும். எனவே பஸ்பாகை கோரளை பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற தொழிலாளர் சார் வேட்பாளர்களையும் பெண்கள் சார்பாக போட்டியிடுகின்ற பெண் வேட்பாளரையும் வெற்றிப்பெறச்செய்ய வேண்டும்.

ஹட்டன் டொன்பொஸ்கோ சவால் கேடயத்துக்கான வீதியோட்டப்போட்டி ஒத்திவைப்பு


அட்டன் சென்பொஸ்கோ கல்லூரியின்; 77 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு அட்டன் சென்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டொன்பொஸ்கோ சவால் கேடயத்திற்கான வீதியோட்டப்போட்டி சீரற்ற காலநிலையினால் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக சென்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கே.இராஜசேகர் தெரிவித்தார். இந்த வீதியோட்டப்போட்டி இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெறவிருந்தமைக்குறிப்பிடத்தக்கது. 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாக்கும் வௌ;வேறாக இடம் பெறவுள்ள இந்த வீதியோட்டப்போட்டிக்கு அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களும் ஏனைய கல்வி வலயங்களைச்சேர்ந்த பாடசாலைகளின் மாணவர்களும் பங்கு பற்ற முடியுமென சென்பொஸ்கோ கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் கே.இராஜசேகர் தெரிவித்தார். அட்டன் சென்பொஸ்கோ கல்லூரியின் அதிபர் என்.எஸ்.குரூஸ் தலைமையில் இடம் பெறவுள்ள இந்த வீதியோட்டப்போட்டி நிகழ்வினை அட்டன் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிசந்திரசிங்ஹ ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தொழிலாளர்கள் மீது கரிசனை செலுத்தும் காவத்தை பெருந்தோட்டக்கம்பனி






















தோட்டத்தொழிலாளர்களின் சுகாதார நலனோம்பு தொடர்பில் தற்போது பல தரப்பினாலும் கவனம் செலுத்தப்படுகின்ற இன்றைய காலத்தில் பெருந்தோட்டக்கம்பனிகள் சில தத்தமது தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் மனதினை வென்றெடுக்கும் வகையில் சில திட்டங்களை எடுத்து வருகின்றன.தேயிலை மலைகளிலும் தேயிலைத்தொழிற்சாலைகளிலும் தொழில் செய்கின்றவர்கள் அழுக்கான ஆடைகளுடன் தான் தொழில் புரிய வேண்டும் என்ற நிலைமை மாறி நாகரீக காலத்திற்கேற்ப சொகுசான ஆடைகளுடன் தொழிலுக்குச்செல்கின்ற நிலைமை தற்போது மலையகப்பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது. வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து அண்மைக்காலமாக ஊடகங்கள் ஆதரபூர்வமாக தகவல்களை வெளியிடத்தொடங்கியமையைத்தொடர்ந்து பெருந் தோட்டக்கம்பனிகளும் தாம் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களின் நலன் கருதி மேற்கொள்கின்ற திட்டங்கள் குறித்து ஊடகவியலாளரகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை பொகவந்தலாவை பகுதிகளிலுள்ள சில தோட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தோட்ட நிருவாகங்கள் சில சுநுளுவு சுழுழுஆ என்றழைக்கப்படுகின்ற ஓய்வறைகளையும் தேயிலை மலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட நாவலப்பிட்டி பிரதேசங்களிலுள்ள தோட்டங்கள் சிலவற்றில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரொசான்ராஜதுரையின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் குயின்ஸ்பெரி தோட்டத்தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட தொழில்சார்தேர்ச்சிப்போட்டியில் தத்தமது திறமைகளை வெளிப்படுத்திய தொழிலாளர்களுக்குப்பெறுமதி வாய்ந்த பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு நிலையில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட நாவலப்பிட்டியவைச்சேர்ந்த இன்னொரு தோட்டமான கெட்டபுலா தோட்டத்தேயிலைத்தொழிற்சாலையில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் நலன் கருதி ஆநுயுடுளு சுழுழுஆ என்றழைக்கப்படுகின்ற உணவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்ற சூழலில் தமது உணவினை உண்ட இந்தத்தேயிலைத்தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இந்த உணவறையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.இதே வேளை இந்தத்தேயிலைத்தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு சவுரியமான சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.இடுப்பில் படங்கைக் கட்டிக்கொண்டும் கந்தையான ஆடைகளை அணிந்து கொண்டும் தொழில் புரிந்த தொழிலாளர்கள் தற்போது வண்ண நிறத்திலான சீருடைகளுடன் தொழில் புரிவதை பார்க்கின்றவர்களுக்கு அந்தத்தொழிலாளர்கள் மீது மரியாதை உணர்வை ஏற்படுத்தும் என்பது உளவியல் ரீதியான செயற்பாடாகும்.இவ்வாறான முன்மாதிரியான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்ற தோட்ட நிருவாகங்கள்,கம்பனிகள் பாராட்டப்படவேண்டியனவாகும். சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆநுயுடுளு சுழுழுஆ ரூ சுநுளுவு சுழுழுஆ திறப்பு விழாவில் பிரதம அதிதியாக காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் உபாலி பிரேமலால் கலந்து கொண்டார்.அத்துடன் அவருடன் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் மனிதவள அபிவிருத்தி பொறுப்பாளர் எஸ். ராம்; ,கெட்டபுலா தோட்ட முகாமையாளர் ராம்தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ தண்டாயுதபாணி தேவஸ்தான் முத்தேர் திருவிழா



















பொகவந்தலாவை நகர் ஸ்ரீதண்டாயுதபாணி தேவஸ்தானத்தின் திருவிழாவினை முன்னிட்டு இடம் பெற்ற பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் பொகவந்தலாவை நகரூடாக முத்தேர்பவனி இடம் பெறுவதையும் படங்களில் காணலாம்.