நுவரெலியா நகரப்பகுதிகளில் வாழுகின்ற விவசாய மக்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.நுவரெலியாவுக்கு விஜயம் செய்த இவர் இந்தப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.
அத்துடன் மழைக்காலங்களில் நுவரெலியா நகர விவசாயிகள்
பாதிக்கப்படுவதற்கு காரணமான கால்வாய் ஒன்றினை விரைவில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
திங்கள், 7 ஜூன், 2010
மக்களின் நலன் கருதி நுவரெலியா நகரில் மரங்கள் அகற்றப்படுகின்றன.
நுவரெலியா நகரின் பிரதான பாதையோரங்களிலுள்ள மரங்களையும் மரக்கிளைகளையும் அகற்றும் நடவடிக்கைகளில் நுவரெலியா மாநகர சபை தற்போது ஈடுபட்டுள்ளது. நுவரெலியா நகரப்பகுதியில் அடிக்கடி ஏற்படுகின்ற சீரற்ற காலநிலையினால் மரங்கள் முறிந்தும் சரிந்தும் விழுவதால் நுவரெலியா நகர மக்களும் நுவரெலியா நகருக்கு வந்து செல்லுகின்ற உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை வழமையானதாகும். இதனைக்கருத்திற்கொண்டே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கின்ற மரங்களை அப்புறப்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு
தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)