மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
புதன், 22 டிசம்பர், 2010
கொட்டகலை நகரில் அதிகாலை தீவிபத்து : உடைமைகளுக்குப்பெரும் சேதம்
கொட்டகலை நகரில்; 22 ஆம் திகதி அதிகாலை 1 .15 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டுகடைத்தொகுதிகளுடன் ஒரு வீடும் தீக்கிரையாகியுள்ளன. கொட்டகலை நகரிலுள்ள நுவரெலியா பிரதேச சபை பணிமனைக்கு முன்னாலுள்ள வர்த்தக நிலைய கட்டிடத்திலேயே இந்தத்தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதன் போது தொலைத்தொடர்பு நிலையமொன்றும் மின்உபகரணங்கள் திருத்தும் நிலையமொன்றும் இந்தக்கடைகளின் மேல் மாடியிலுள்ள வீடுடொன்றும் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன.
கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சேர்ந்த ஊழியர்களும் பத்தனை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.மின்சார சபையினர் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகைத்தந்து மின்னிணைப்பினை துண்டித்துள்ளனர்.
மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்தத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாமனெ சந்தேகிக்கப்படுகின்றது.இந்தச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.இந்தச்சம்பவம் தொடர்பாக பத்தனை பொலிஸார் விசாரணகைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயனாளிகளுக்குப் பொருட்கள் பகிர்வு
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் இவ்வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து
பெறப்பட்ட பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் தலவாக்கலை ,மஸ்கெலியா ,அட்டன் பணிமனைகளில் இடம் பெற்றன.இந்தப்பொருட்களை மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் பயனாளிகளுக்கு ஒப்படைப்பதைப்படங்களில் காணலாம
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)