திங்கள், 2 ஆகஸ்ட், 2010

அட்டனில் சாரணர் பயிற்சி முகாம்

மத்திய மாகாணத் தமிழ்க்கல்வியமைச்சின் ஏற்பாட்டின் கீழ் நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கத்தின் அனுசரணையுடன் சாரணர் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாமொன்று கடந்த 31 ஆம் திகதி முதல் அட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெற்று வருகின்றது. சுமார் 15 வருடங்களுக்குப்பின்னர் நுவரெலியா மாவட்டத்தில் இடம் பெறுகின்ற இந்த இரண்டாம் கண்ட சாரணர் பயிற்சி முகாமில் கண்டி ,நுவரெலியா ,மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து சாரணர் ஆசிரியர்கள் 60 பேர் கலந்து கொண்டுள்ளனர்.இந்தப் பயிற்சி முகாம் இன்று 3 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.