நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிதிகாம்பரம் தெரிவித்தார்.
சாமிமலை மாநெலி மாகொல தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக பெறப்பட்ட கூரைத்தகடுகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களினதும் ஏனைய மக்களினதும் தேவைகளையும் குறைபாடுகளையும் அறிந்து தனது நாடாளுமன்ற பதவியின் ஊடாக அந்த மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றேன். இவ்வாறு மக்களுக்குச் சேவையாற்றுகின்ற போது எமது சமூகத்தினைச் சேர்ந்த சிலர் காழ்ப்புணர்வு கொண்டு தடையாக செயற்படுவது கவலைக்குரிய விடயமாகும். எனினும் எனக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கு மூலமாக அந்தத் தடைகளையும் தகர்த்து தன்னால் சேவை செய்ய முடிகின்றது.
இதனடிப்படையில் மலையகத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட மக்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உறுதுணை புரிகின்ற ஜனாதிபதி அவர்களுக்கும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் மலையகத்தமிழ் மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிதிகாம்பரம் மேலும் தெரிவித்தார்.