மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 12 அக்டோபர், 2012
சீன ரயில் முதற்தடவையாக பதுளை பயணம்.
சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்களில் ஒன்று நேற்று கொழும்பிலிருந்து காலை பதுளை நோக்கி புறப்பட்டது.
இந்த ரயில் கொழும்பு மருதானை ரயில் நிலையத்திலிருந்து நேற்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. இப் பரீட்சார்த்த ரயில் பயணத்தில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இணைந்து கொண்டார்.
புதிய ரயில் அட்டன் ரயில் நிலையத்தை நேற்று பிற்பகல் 2.06 மணியளவில் வந்தடைந்தது .இதன்போது அட்டன் ரயில் நிலைய குறைபாடுகளையும் பயணிகள் எதிர் நோக்கும் பயண அசௌகரயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
மலையகப்பகுதிக்கு பதிய ரயில் சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரண்டு தடைவைகள் ஏற்கனவே பரீட்சித்துப் பார்த்த போதிலும் இம்முறையே பதுளை நோக்கி முதல் தடவையாக இந்தப் புதிய ரயில் சேவையில் ஈடுபட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)