மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 12 ஜூலை, 2011
இன்றைய நவீன காலத்தில் மாணவர்கள் கொழுந்து மடுவத்தில் கல்வி கற்கும் பரிதாபம்
சோ.ஸ்ரீதரன்
மத்திய மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களில் அட்டன் கல்வி வலயத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டு வருதற்கு இந்தக் கல்வி வலயத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு ஆளணி மற்றும் பௌதிக வளங்கள் ஓரளவு கிடைத்து வருகின்றமையே காரணமென்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் இந்தக்கல்வி வலயத்தைச்சேர்ந்த அட்டன் மற்றும் கொட்டகலை நகரப்பகுதிக்கு அருகிலுள்ள பிட்டன்வின் தமிழ் பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து எவரும் கண்டு கொள்ளமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். தோட்டக்குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள இந்தப்பாடசாலைக்கு உரிய வகுப்பறை கட்டிட வசதியில்லாத காரணத்தினால் கொழுந்து மடுவத்தில் கல்விக்கற்க வேண்டிய நிலைமை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக்கொழுந்து மடுவத்தில் பெற்றோர் கொழுந்து நிறுவை செய்துகொண்டிருக்கின்ற அதேவேளை அதனைப்பார்த்துக்கொண்டு கல்விக்கற்க வேண்டிய நிலைமை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 90 மாணவர்கள் கல்விக்கற்கின்ற இந்தப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான இடமொன்றினை தோட்ட நிருவாகம் ஒதுக்கிக்கொடுத்துள்ள போதும் புதிய கட்டிடம் அமைப்பது தொடர்பில் மத்திய மாகாணக் கல்வியமைச்சு அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்று பெற்றோர் முறையிடுகின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)