மலையக உயர்கல்வித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆசிரியர் கே.ஜீவராஜனின் திடீர் மறைவு மலையகக்கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும் என்று மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் பிரதம இணைப்பாளர் சங்கரமணிவண்ணன் அறிவித்துள்ளார்..
அன்னாரின் பிரிவால் வாடுகின்ற அன்னாரின் குடும்பத்தாருக்கும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி சமூகத்திற்கும் மலையக ஆசிரியர் ஒன்றியம் தனது ஆழந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகஅவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக நிலவுகின்ற ஆளணி மற்றும் பௌதிக வளப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று 8 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வின் போது முதலமைச்சரின் கவனத்திற்கு தன்னால் கொண்டுவரப்பட்டதாக ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மத்திய மாகாhணசபையின் உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
தோட்டப்பகுதிகளிலுள்ள தொடர் குடியிருப்புக்களில் அடிக்கடி ஏற்படுகின்ற தீவிபத்துக்கள் தொடர்பிலும் கண்டி ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற நியாயமான போராட்டம் குறித்தும் மத்திய மாகாணசபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் இராஜரட்ணம் இன்று 8 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வின் போது மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 8 ஜூன், 2010
மலையகத்தில் பிரபல கணிதத்துறை ஆசிரியர் மாரடைப்பால் மரணம்.
மலையகத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொறியியற்துறை மாணவர்களை
உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் கணிதத்துறை
ஆசிரியர் கே.ஜீவராஜன் இன்று 8 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
இன்று 8 ஆம் திகதி அவர் வகுப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
போது திடீரென மயக்கமுற்ற கீழே விழுந்துள்ளார்.உடனடியாக இவரை டிக்கோயா கிளங்கன்
மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றிருந்த போது அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டிலிருந்து அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் உயர்தரத்தில் கணிதத்துறையில் கல்விக்கற்றுக்கொடுத்து வந்த இவரிடம் கல்விப்பயின்ற மலையகப்பகுதி மாணவர்களின் 200க்கும் மேற்பட்டோர் பொறியியற்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டு தற்போது பொறியியலாளர்களாக உருவாகியுள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் மிளிர்கின்றனர்.
இவர் வெளிநாட்டுப் புலமைப்பரிசில் பல பெற்று வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவராவார். அட்டன் கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ள இவர் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச்சேர்ந்த மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அந்த மாணவர்களுக்கு
உரிய பயிற்சிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச்சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி மாணவரொருவர் இலங்கைக்கு வெண்கலப்பதக்கமொன்றைப் பெற்றுத்தருவதற்கும் இவர் காணரமாகவிருந்துள்ளார்.
மலையகத்தமிழ்க் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களின் ஒருவராகக் கருதப்படுகின்ற ஆசிரியர் ஜீவராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை 10 ஆம் திகதி அட்டனில் இடம் பெறவுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)