நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மறே ராஜமலைத்தோட்டத்தில் சட்டவிரோதமான மரை ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்ற நபர்கள் இருவர் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டதனால் ஒவ்வொருவருக்கும் தலா 30 ஆயிரம் அபராதத்தினை அட்டன் நீதிவான் சதுன்விதாரண விதித்துள்ளார்.
கடந்த ஏழாம் திகதி ராஜமலைத்தோட்டத்தக்கு அருகிலுள்ள காட்டுக்குச்சென்ற இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த இருவர் மரை ஒன்றினை வேட்டையாடி அதன் இறைச்சியினை விற்பனை செய்தமைக்குறித்து நல்லத்தண்ணி பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து நல்லத்தண்ணி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி அனில் ஜயசிங்ஹவின் ஆலோசனைக்கேற்ப பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் குறிப்பிட்டத்தொட்டத்திற்குச் சென்று மரையில் உடற்பாகங்களுடன் சந்தேக நபர்களையும் 8 ஆம் திகதி கைது செய்துள்ளனர். இதன் பின்பு சந்தேக நபர்கள் 9 ஆம் திகதி அட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பின்பு மேற்கொளள்ப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் குற்றத்தினை ஒப்புக்கொண்டதால் இந்த இருவருக்கும் தலா 30 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.