புதன், 7 ஜூலை, 2010

அட்டன் வலய தமிழ் மொழித்தினப்போட்டிகள்





அட்டன் கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தினப்போட்டிகள் இம்மாதம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் அட்டன் சென் பொஸ்கோ கல்லூரியில் இடம் பெற்றன.
இந்தப்போட்டிகளில் பொகவந்தலாவை ,அட்டன் ,மஸ்கெலியா ,குயில்வத்தை ,புளியாவத்தை,கவிரவில, நோர்வூட் ஆகிய பிரதேச மட்டத்தமிழ் மொழித்தினப்போட்டிகளில் முதலாமிடத்தைப்பெற்ற நிகழ்ச்சிகள்
பங்குபற்றின. இந்த வலய மட்டப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற நிகழ்ச்சிகள் மத்திய மாகாண ரீதியிலான தமிழ் மொழித்தினப்போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு தகுதிப்பெற்றுள்ளன. அட்டன் வலய மட்டத்தமிழ் மொழித்தினப்போட்டிகளை அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜ் தலைமையில் தமிழ் மொழிப்பாடத்திற்கான உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி லக்ஷ்மிபிரபா ,தமிழ் மொழிப்பாட ஆசிரிய ஆலோசகர் சி.கணபதிப்பிள்ளை உட்பட ஏற்பாட்டுக்குழுவினர் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.