மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 11 ஜூலை, 2010
அமரர் ஜீவராஜனின் நினைவுத்தினக் கூட்டம்
மலையகத்தின் பிரபல கணிதத்துறை ஆசிரியராகவும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் உப அதிபராகவும் கடமையாற்றிய அமரர் ஜீவராஜனின் நினைவுத்தினக்கூட்டமும் நினைவு மலர் வெளியீடும் இன்று அட்டன் டி.கே.டப்ளியூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வெ.இராதாகிருஷ்ணன் ,மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ,இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் ,தேசிய கல்வி நிறுவகத்தின் செயற்றிட்டப்பணிப்பாளர் பேராசிரியர் இரட்நாயக்க உட்பட பலர் கலந்து கொண்டு அமரர் ஜிவராஜனின் முக்கியத்துவம் பற்றியும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதென்றும் உரையாற்றினர்.
இந்த நிகழ்வின் போது ஜீவ விழி என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்டப்பகுதி வைத்திய சேவையை மேம்படுத்தக்கோரி அட்டனில் ஆர்ப்பாட்டம்
பெருந்தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த தொழிற்சங்கங்கள் சிலவற்றின் ஏற்பாட்டில் இன்று நண்பகல் வேளையில் அட்டன் நகரில் கவனயீர்ப்புப்போராட்டமொன்று இடம் பெற்றது.
புசல்லாவை புரட்டொப் தோட்டத்தில் கடந்த மாதம் இடம் பெற்ற சிசுமரண சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பெருந்தோட்டப்பகுதி மக்களின் சுகாதார வைத்திய சேவைகளுக்கான உரிய உட்கட்டமைப்பை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் சிலவற்றின் ஏற்பாட்டில் அட்டன் பிரதான பேருந்து தரிப்பு நிலையப்பகுதியிலுள்ள பிரதான பாதையோரத்தில் இன்று இடம் பெற்ற கவனயீர்ப்புப்போராட்டத்தில் பெண்கள் ,சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)