இலக்கியம் கலாசாரம்


பனித்துளி
நீல வானத்தை
கறுப்பு வானமாய்..
புரட்டிய போது..
பறந்த தூசுக்கள் !

இரவை மேய்ந்து
அசை போட்ட..
நிலவு மாட்டின்
வாயிலிருந்து வழியும்
எச்சில் சிதறல்கள் !

கதிரவனின்
கரம்பட்டால்
சுருங்கி மறைகின்ற
தொட்டாற் சிணுங்கிகள் !

வானப்புத்தகத்தின்
கண்ணீர் கதைகள்!
கவிதைகள் !

சூரிய சர்வாதிகாரத்தை
எதிர்த்து
தினம் மடிந்து போகும்
பனிப்போராளிகள் !      - சோ.ஸ்ரீதரன் - ( தினகரன் )
கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்திருவிழா
 



கொட்டகலை ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இடம் பெற்ற பாற்குட பவனி ,பறவைக்காவடி ஊர்வலம் ,பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் போன்ற நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன.இன்று பிற்பகல் 3 மணிக்கு கொட்டகலை நகரூடாக தேர்பவனி இடம் பெறுகின்றது. அத்துடன் இன்றைய விநாயக சதுர்த்தியை முன்னிட்டு மலையகத்திலுள்ள விநாயகர் ஆலயங்களில் இடம் பெறுகின்ற விசேட பூஜைவழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 நாவலப்பிட்டியவில்; தமிழ்ச்சங்கம் அங்குரார்ப்பணம்
 

நாவலப்பிட்டி பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து  நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் அமைப்பொன்றினை ஏற்படுத்தியுள்ளனர்.நாவலப்பிட்டி
பிரதேசத்தில் தமிழ் இலக்கியம் ,கலாசாரம் போன்ற துறைகளை ஊக்குவிப்பதற்காகவே  இந்தத் தமிழ்ச்சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தத் தமிழச்சங்கத்தில் நாவலப்பிட்டி பிரதேச  எழுத்தாளர்கள் ,இலக்கிய
ஆர்வலர்கள்,கல்வித்துறை சார்ந்தவர்கள் ,வர்த்தகர்கள் போன்றோர் அங்கம் வகின்றனர். தற்போது இந்தத்தமிழ்ச்சங்கத்தின் ஊடாக நூல் அறிமுக விழாக்கள் ,  இலக்கிய சொற்பொழிவுகள் ,எழுத்தாளர் ஒன்று கூடல்கள் என்பன இடம்  பெற்று வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.



பொஸ்கோ கல்லூரியின் இஸ்லாமிய தினவிழா


அட்டன் பொஸ்கோ கல்லூரியின் இவ்வருடத்திற்கான இஸ்லாமிய தினவிழா 11 ஆம் திகதி இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கைத்திறந்த பல்கலைக்கழகத்தின் விசேட தேவைகள் பிரிவின் பீடாதிபதி கலாநிதி ஜவ்பர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இஸ்லாமிய மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இடுகையிட்டது