மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வியாழன், 2 செப்டம்பர், 2010
அட்டனில் பாற்பொருள் விற்பனைக்கூடம்
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் அட்டன் பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உற்பத்திப்பொருள் விற்பனைக்கூடமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனைக்கூடத்தினை கால்நடை அபிவிருத்தி ,சமூக ,கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பிற்கேற்ப பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண திறந்து வைத்ததன் பின்பு நுகர்வோர் ஒருவருக்கு பொருட்களை சம்பிரதாயப்பூர்வமாக விற்பனை செய்தார்.
அட்டன் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 320 பேர் பயிற்சி பெற்று வெளியேறினர்
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு பயிற்சிகளைப்பெற்ற 320 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டனில் இடம் பெற்றது. இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்து கொண்ட பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண மாணவர்கள் சிலருக்குச்சான்றிதழ்களை வழங்கி பதக்கங்களை அணிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மத்தியமாகாணத்தமிழ்க்கல்வியமைச்சர் அனுஷியா சிவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியைப்பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்குச் சர்வதேச தரத்திலான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமைக்குறிப்பிடத்தக்கது.
இலக்கியவாதி சுகனுடனான இலக்கிய சந்திப்பும் மலையக கூத்துக் கலைஞர்களுடனான அனுபவ பகிர்வும்
இலக்கியவாதியும் நிச்சாமம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சுகனுடனான இலக்கிய சந்திப்பையும் செம்மொழி மாகாநாட்டில் கலந்துக் கொண்ட மலையக கூத்து கலைஞர்களுடனான அனுபவ பகிர்வையும் முச்சந்தி இலக்கிய வட்டம் ஹட்டனில் ஏற்பாடு செய்துள்ளது.இச்சந்திப்பு 05-09-2010 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் சமூக நல அபிவிருத்தி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். லெனின் மதிவானம் தலைமையில் இடம் பெறவுள்ள இந்நிகழ்வில்; எம். நாகலிங்கம், மல்லிகை சி.குமார் சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் சி. காண்டடீபன், ஜே. பிரான்சிஸ் ஹலன், சாம்பசிவ மூர்த்தி, ஆகியோர் கருத்துரை வழங்குவார்கள். நன்றியுரையை இங்கர்சால் வழங்குவார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)