மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
தோட்டப்பகுதி பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் அதிகரிப்பு
இலங்கையின் தோட்டபுறப் பாடசாலைகள் மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் விசேடமாக தோட்டப் பகுதிகளில் வருடாந்தம் பாடசாலைகளை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 20 வீதம் என்ற அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆரம்ப பாடசாலையான முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரையுள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 8.4 வீதமாக காணப்படுவதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் தோட்டபுறங்களில் மேற்கொண்ட புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் சதவீதம் தோட்டப்புறங்களில் 20 வீதமாக காணப்பட்ட போதிலும் நாட்டின் ஏனைய பகுதியில் இந்த எண்ணிக்கை 5 வீதமாக காணப்படுகிறது. அத்துடன் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து விலகும் மாணவர்களின் சதவீதம் தோட்டப்புறங்களில் 8.4 வீதமாக காணப்பட்ட போதிலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்த எண்ணிக்கை 1.4 வீதமாக காணப்படுகிறது. இதனை தவிர தோட்டப்புறங்களில் சாதாரண தரப்பரீட்சையில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 வீதம் என்ற குறைந்த எண்ணிக்கையில் உள்ளதுடன் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சத வீதமாக காணப்படுகிறது. தோட்டப்புற பாடசாலைகளில் போதிய வசதிகள் காணப்படவில்லை எனவும் அத்துடன் தோட்டங்களில் இயங்கும் பாடசாலைகள் பலவற்றில் உயர்தர வகுப்புகள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதார தாழ் நிலையாலும் போதிய வாழவிட வசதிகள் இன்மையினாலும் பாடசாலைகளுக்குச்செல்ல வேண்டி பெரும்பாலான பிள்ளைகள் வறிய நிலையை எதிர்நோக்குவதாலும் பாடசாலைக்குச்செல்லும் ஆர்வம் பிள்ளைகள் மத்தியில் குறவைடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம் பெற்றது
இவ்வருடத்திற்கான ஐந்தாந்தரப்புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. முதலாவது வினாப்பத்திரற்கான பரீட்சை காலை 9.௩0 மணிமுதல் 10.15 மணிவரையிலும் இரண்டாம் வினாப்பதிரத்திற்கான பரீட்சை காலை 10.45 முதல் நண்பகல் 12 மணிவரை இடம் பெற்றது.. இந்தப்பரீட்சைக்குத்தோற்றவுள்ள பிள்ளைகளைப் பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வருவதில் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தியதை அவதானிக்கக்கூடியதாகயிருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)