மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
நீர் மின்திட்டத்தினால் தொழிலாளர்களுக்குப்பாதிப்பு : முரளிரகுநாதன் தெரிவிப்பு
பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய நீர்மின் உற்பத்தி திட்டத்தினால் கிடைக்கவுள்ள வருமானத்தில் ஒரு தொகைப்பங்கை இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களுக்குப்பகிர்ந்து கொடுப்பதற்கு தோட்ட நிருவாகம் முன்வரவேண்டும் என்று இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து
வருவதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :
கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திற்கு தான் நேரடியாக விஜயம் செய்து தோட்டத்
தொழிலாளர்களைச்சந்தித்துப்பேசிய போதே இந்த வேண்டுகோளை அவர்கள்
என்னிடம் விடுத்துள்ளனர்.கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தின் கெசல்கமுவஓயா ஆற்றோரத்தில் உள்ள தேயிலைபயிர்ச்செய்கைப்பிரதேசத்தில் தற்போது தோட்ட நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் சிறியளவிலான நீர்மின் உற்பத்தித்திட்டமொன்று மோற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தத்திட்டத்திற்காக குறிப்பிட்டளவு தேயிலை நிலங்களும் தோட்டத்தொழிலாளர்கள் தமது கால்நடைகளுக்குத் தேவையான புற்களுக்காக பயன்படுத்தி வந்த நிலங்களும் அபகரிக்கபட்டு அந்தப்பகுதியில் தற்போது இந்த நீர் மின் உற்பத்தித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் தமது வருமானத்தினை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த நீர் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய நஷ்டஈடு அல்லது வருமானத்தினைப் பெற்றுத்தருவதற்கு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிருவாகம் முன்வரவேண்டுமென்று தொழிலாளர்கள் கடிதமொன்றில்
கையெழுத்திட்டுக்கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக உரிய தோட்ட நிருவாகத்துடன் பேசுவதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
நாவலப்பிட்டி இந்து மன்றத்தின் ஓராண்டு பூர்த்தி விழா
நாவலப்பிட்டி இந்து மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நாவலப்பிட்டி தமிழ்க் கலாசார மணடபத்தில் இந்த மன்றத்தின் தலைவர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாணத்தமிழ்க்கல்வி ,இந்து கலாசார அமைச்சர் திருமதி .அனுஷியா சிவராஜா கலந்து கொண்டார். இவருடன் அகில இலங்கை இந்து மன்றத்தின் பொதுச்செயலாளர் க.நீலகண்டன் ,விரிவுரையாளர் வாசீக கலாநிதி க.நாகேஸ்வரன் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது மாணவர்களின் நடன நிகழ்வுகள் ,சமயச்சொற்பொழிவுகள் ,போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் என்பன இடம் பெற்றன.
நான்கு வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரோயகம் செய்ய முயற்சித்த சந்தேக நபர் விளக்கமறியலில் பொகவந்தலாவையில் சம்பவம்
பொகவந்தலாப்பிரதேச தோட்டமொன்றில் நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டதாக கருதப்படுகின்ற சந்தேக நபரொருவரை பொகவந்தலாவை பொலிஸார் முதலாம் திகதி அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தியதைத்தொடர்ந்து சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 31 ஆம் திகதி மாலை பொகவந்தலாவை பிரதேச தோட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவன் அதே தோட்டத்தைச்சேர்ந்த நான்கு வயது சிறுமியை மறைவிடமொன்றுக்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முற்சித்துள்ளார்.
இவ்வேளை சிறுமி கூக்குரலிடவே பொதுமக்கள் குறிப்பிட்ட இளைஞனைப்பிடித்து பொகவந்தலாவைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டச்சிறுமி பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ
பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையின் பேச்சாளர்
ஒருவர் தெரிவித்தார்.
இவ்வேளை சிறுமி கூக்குரலிடவே பொதுமக்கள் குறிப்பிட்ட இளைஞனைப்பிடித்து பொகவந்தலாவைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டச்சிறுமி பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக மருத்துவ
பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையின் பேச்சாளர்
ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)