திங்கள், 5 ஜூலை, 2010

குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் 8 பெண்தொழிலாளர்கள் பாதிப்பு



பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தில் பெண் தொழிலாளர்களைக் குளவிகள் சூழ்ந்து தாக்கியதால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.மேலும் ஐந்து பேர் பொகவந்தலாவை தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றதன் பின்பு தத்தமது வீடுகளுக்குச்சென்றுள்ளனர்.
பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தின் 14 ஆம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளர்களையே குளவிகள் சூழ்ந்து தாக்கியுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.