பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டன்பார் தோட்டத்தைச்சேர்ந்த கண்ணையா புஸ்பராஜ் என்பவர் கடந்த 5 ஆம் திகதி முதல் காணாமல் போய்
உள்ளமைத்தொடர்பில் அவரின் மனைவி செய்துள்ள முறைப்பாட்டினைத் தொடர்ந்து சந்தேக நபரொருவரை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரொப்கில் தேயிலை தொழிற்சாலையில் வாகன ஓட்டுனராக தொழில் புரியும் கண்ணையா புஸ்பராஜீக்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அவர் தொழில் புரியும் தேயிலை தொழிற்சாலையில் இருந்து அங்கு தொழில் புரிகின்ற ஒருவர்; தொலைபேசி மூலம் வேலைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் தொழில் புரியும் இடத்துக்கு வீட்டிலிருந்து எட்டு மணியளவில் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் பற்றிய தகவல் எதுவும் குடும்பத்தாருக்குக் கிடைக்கவில்லை .அதே வேளை தொலைபேசி மூலம் அழைப்புவிடுத்த நபரைத் தேடிய போது அவரும் தலைமறைவாகியுள்ளர்.இவ்விடயம் தொட்ரபாக காணாமல் போனவரின் மனைவி பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத்தொடர்ந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தவரை பொகவந்தலாவை பொலிஸார் இன்று 9 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து அட்டன் நீதிமன்றில்
ஆஜர்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தள்ளதாக பொகவந்தலாவைப் பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதே வேளை காணாமல் போனவரை உடனடியாக மீட்டுத்தருமாறுக்கோரி தோட்ட மக்கள்
தோட்ட நிருவாகத்திற்கெதிரான பல்வேறுகவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.