மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 20 ஜூலை, 2010
அட்டன் நகரசபை பகுதிக்குள் மண்சரிவு அபாயம் : நகரசபைத்தலைவர் அறிவிப்பு
அறிவிப்புொடர்ச்சியாக அடைமழைப்பெய்து வருவதால் அட்டன் - டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார். அட்டன் நகருக்கு அண்மையிலுள்ள காமினிபுரம் ,வில்புரட் புரம் ,சமனலகம ஆகிய கிராமப்பகுதிகளில் பல இடங்களில் ஏற்கனவே மண்சரிவுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காணப்படின் இந்தக்கிராமப்பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளதால் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வாழுகின்றவர்கள் மாற்றிடங்களுக்கு இடம் பெயர்ந்து கொள்ள வேண்டும். மேலும் மண்சரிவு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக நகரசபையின் கவனத்திற்குக் கொண்டு வருமாறும் கேட்டுக்கொன்கின்றேன் என்று அட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர் ஏ.நந்தகுமார் தெரிவித்தார்.
மத்திய மாகாணசுகாதார அமைச்சர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம்
ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதனின் வேண்டுகேளுக்கேற்ப மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டறிவதற்காக மத்திய மாகாணசுகதார அமைச்சர் சுனில் அமரதுங்க அண்மையில் இந்த வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்த போது சுகாதர அமைச்சர் நோயாளி ஒருவருடன் உரையாடுவதையும் அதன் பின்பு இடம் பெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் கருத்துரை வழங்குவதையும் அருகில் மத்திய மாகாணசுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க ,மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் உட்பட பலர் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)