நிலையினால் சாமிமலை பிரதேச தோட்ட மக்களுக்குப் பெரும் பாதிப்பு
மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தைச்சேர்ந்த தோட்டமக்களின் நூற்றுக்கணக்கானோர் இடம் பெயர்ந்து தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 31 ஆம் திகதி பிற்பகல் வேளையில் வீசிய புயல்காற்றினால் தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புக்களின் கூரைத்தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு சென்றதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் தோட்டத்திலுள்ள சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை கிங்காரோ தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சே;ரந்த 47 பேர் தோட்ட ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை பாகினி தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தோட்ட நூலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை பெயார்லோன் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் தோட்ட பாடசாலை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓமிடல் , சோளங்கந்தை , ஓல்டன் ஆகிய தோட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தோட்ட நிருவாகங்கள் சமைத்த உணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவசட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.