நாவலப்பிட்டி போஹில் , பாராண்டா ஆகிய தோட்டங்களில் 110 ஏக்கர் நிலப்பகுதியை ஜனவசம நிறுவனத்தினால் வெளியாருக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டம் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் தலையீட்டினால் இன்று 12 ஆம் திகதி முதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையினார் நிருவாக்கிக்கப்படுகின்ற போஹில் , பாரண்டா ஆகிய தோட்டங்களின் தேயிலைப் பயிர்ச்செய்கை நிலங்களை குறிப்பிட்ட சபை தோட்டத்தொழிலாளர்களுக்கு அறிவிக்காமல் வெளியாருக்கு வழங்கியுள்ளதாகவும் இந்த நிலப்பகுதியைப் பெற்றுக்கொண்டவர்கள் தற்போது உரிமைக்கோரி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத்தோட்டங்களைச் சேர்ந்த 300 தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் திகதி முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்
மேற்படி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அலுத்கமகே இன்று 12 ஆம் திகதி குறிப்பிட்ட தோட்டங்களுக்கு விஜயம் செய்து தோட்ட அதிகாரியுடனும் தொழிலாளர்களிடமும் கலந்துரையாடியதைத் தொடர்ந்தே தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு முடிவுக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பிட்டத் தோட்டங்களின் விளை நிலங்களை எக்காரணம் கொண்டும் வெளியாருக்க வழங்க முடியாது. இவ்விடயம் தொடர்பாக நான் ஜனவசம தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தொழிலாளர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தமது பணி பகிஸ்கரிப்பைக் கைவிட்டனர்.