மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010
மஸ்கெலியா அப்புகஸ்தென்ன நிருவாகத்தின் கெடுபிடிகளால் தொழிலாளர்கள் பாதிப்பு :முரளிரகுநாதன் தெரிவிப்பு
மஸ்கெலியா பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட அப்புகஸ்தென்ன தோட்ட நிருவாகம் இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களிடத்தில் கடும் போக்குடன் நடந்து கொள்வதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :
அப்புகஸ்தென்னத்தோட்ட நிருவாகத்தின் கெடுபிடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு கவனயீர்ப்புப்போராட்டங்களில் ஈடுபட்டனர்.அத்துடன் தொழிற்திணைக்களத்தின் அட்டன் பணிமனையிலும் முறைப்பாடு செய்தனர்.எனினும் தோட்ட நிருவாகத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறானதொரு நிலையில் அப்புகஸ்தென்ன தோட்டத்தொழிலாளர்களின் விருப்பத்திற்கு மாறாக குறிப்பிட்டத் தொழிற்சங்கமொன்றுக்குச் சந்தாவை அனுப்புவதில் தோட்ட நிருவாகம் ஆர்வம் காட்டி வருவதாக தொழிலாளர்கள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன்.
வெஸ்டோல் - பார்க்கேப்பல் பாதை சீர்கேடு
கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியிலுள்ள வெஸ்டோல் - பார்கேப்பல் பிரதான பாதையின் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரப்பாதை குன்றும் குழியுமாகவுள்ளதால் இந்தப்பாதையின் ஊடாக போக்குவரத்தில் ஈடுபடுவதில் வாகனசாரதிகளும் ஏனையவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே இந்தப்பாதையினைச்செப்பனிடுவதற்கு மத்திய மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)