நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியா டிப்டொப் விருந்தகத்தில் இடம் பெறவுள்ளதாக இந்த ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.தியாகு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் இந்த மாவட்டத்தின் பல்வேறு விடயங்களை
செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் வழங்கி சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றனர். அத்துடன் நாட்டு மக்களுக்குத் தகவல்களை வழங்குபவர்களாகவும் திகழுகின்றனர். இந்த ஊடகவியலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து இவர்களின் பல்வேறு
தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே இந்த ஒன்றியம்
அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இவ்வருடத்திற்கான பொதுக்கூட்டத்தினையும் ஒன்று கூடலையும் நுவரெலியாவில் வெகுவிமர்சையாக் நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். இந்த நிகழ்வின் ஊடகத்துறைக்கு நீண்டககாலம் சேவையாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்
ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.தியாகு மேலும் தெரிவித்தார்.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
சனி, 5 ஜூன், 2010
நாவலப்பிட்டியில் அகப்பட்ட மலைப்பாம்புக்குட்டியைப்பிரதேச மக்கள் வனஇலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாவலப்பிட்டி மகாவலி ஆற்றில் நீந்தி வந்த மூன்றடி நீளமான மலைப்பாம்புக்குட்டி ஒன்றினை பிரதேச மக்கள் இன்று 5 ஆம் திகதி பிடித்துள்ளனர். நாவலப்பிட்டி பெய்லி வீதியோரத்திலுள்ள மகாவலி ஆற்றில் பிரதேச வாசிகள் சிலர் மீன் பிடிப்பதற்காக போடப்பட்டிருந்த வலையில் மாலைப்பாம்புக்குட்டி ஒன்று அகப்பட்டுள்ளது. இந்தப்பாம்புக்குட்டியைப் பிடித்த பிரதேச மக்கள் இவ்விடயம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸாருக்கு அறிவித்தனர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்புக்குட்டியை நாவலப்பிட்டி பொலிஸாரின்; ஆலோசனைக்கேற்ப வன இலகா அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்படடுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
சாமிமலையில் மாணிக்கக்கற் படிமங்கள் கண்டுபிடிப்பு
சாமிமலை மஸ்கெலியா ஓயாவில் மாணிக்கக் கற் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக மஸ்கெலியா பிரதேசத்தில் பெய்த கடும் மழையை அடுத்து மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்ததனால் அப்பகுதியிலுள்ள கிறின்லைன் குடியிருப்பைச்சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இதனையடுத்து மஸ்கெலிய ஓயாவைப் புனரமைப்பதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சும் நுவரெலியா மாவட்டச்செயலகமும் நடவடிக்கை எடுத்தது. இந்தப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அந்தப் பகுதியில் இல்லம் என்று அழைக்கப்படும் மாணிக்கக் கற்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதற்காக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு விஜயம் செய்தது. மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நுவரெலியா மாவட்டச் செயலாளரும் இவ்விடத்திற்கு வருகை தந்து ஆராய்ந்தபோது மாணிக்கக் கற் படிவம் உள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தைச்சுற்றித் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணிக்கக்கற்கள் அகழும் நடவடிக்கைகளை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை பொறுப்பெடுத்து மாணிக்கக்கங்கள் அகழும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.இதனைத்தொடர்ந்து சாமிமலை கிறின்லைன்பார்ம் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆற்றினை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்
நோர்வூட் - பொகவந்தலாவை பிரதான பாதையில்; சென் ஜோன் டிலரி பகுதியில் மார்ச்சு மாதம் 31 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர் சிகிச்சைப்பலனின்றி நேற்று நேற்று 5 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கடந்த மார்ச்சு மாதம் 31 ஆம் திகதி கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்குச் சீமெந்து கூரைத்தகடுகளை ஏற்றிச்சென்ற லொறி சென்ஜோன்டிலரி தோட்டத்துக்கு அருகிலுள்ள பாலத்தின் பாதுகாப்பு மதிலில் மோதுண்டு ஆற்றில் குடைசாய்ந்தது. இதன் போது சாரதி படுகாயங்களுடன் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சைப்பலனின்றி கடந்த இரண்டு மாதங்களுக்குப்பின்னர் தற்போது உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வெஞ்சர் லோவ லோரன்ஸைச்சேர்ந்த அழகன் ஜெயராம் பன்னீர் ( வயது 32 ) என்பவராவார். விபத்து நடந்த இடத்தில் அமைந்துள்ள பாலம் 50 வருடங்களுக்கு மேல் பழமையானதாகும். இந்தப்பாலத்தினைச் செப்பனிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)