சனி, 5 ஜூன், 2010

சாமிமலையில் மாணிக்கக்கற் படிமங்கள் கண்டுபிடிப்பு







சாமிமலை மஸ்கெலியா ஓயாவில் மாணிக்கக் கற் படிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக மஸ்கெலியா பிரதேசத்தில் பெய்த கடும் மழையை அடுத்து மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்ததனால் அப்பகுதியிலுள்ள கிறின்லைன் குடியிருப்பைச்சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயினர். இதனையடுத்து மஸ்கெலிய ஓயாவைப் புனரமைப்பதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சும் நுவரெலியா மாவட்டச்செயலகமும் நடவடிக்கை எடுத்தது. இந்தப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அந்தப் பகுதியில் இல்லம் என்று அழைக்கப்படும் மாணிக்கக் கற்படிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்வதற்காக இரத்தினக் கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் அதிகாரிகள் குழுவொன்று அப்பகுதிக்கு விஜயம் செய்தது. மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நுவரெலியா மாவட்டச் செயலாளரும் இவ்விடத்திற்கு வருகை தந்து ஆராய்ந்தபோது மாணிக்கக் கற் படிவம் உள்ளமை உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தைச்சுற்றித் தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணிக்கக்கற்கள் அகழும் நடவடிக்கைகளை இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபை பொறுப்பெடுத்து மாணிக்கக்கங்கள் அகழும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன.இதனைத்தொடர்ந்து சாமிமலை கிறின்லைன்பார்ம் குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆற்றினை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை: