சனி, 5 ஜூன், 2010

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில் இடம் பெறவுள்ளது.

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியா டிப்டொப் விருந்தகத்தில் இடம் பெறவுள்ளதாக இந்த ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.தியாகு தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் இந்த மாவட்டத்தின் பல்வேறு விடயங்களை
செய்திகளாகவும் கட்டுரைகளாகவும் ஒளிப்படங்களாகவும் வழங்கி சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றனர். அத்துடன் நாட்டு மக்களுக்குத் தகவல்களை வழங்குபவர்களாகவும் திகழுகின்றனர். இந்த ஊடகவியலாளர்களை அமைப்பு ரீதியாக ஒன்றிணைத்து இவர்களின் பல்வேறு
தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காகவே இந்த ஒன்றியம்
அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இவ்வருடத்திற்கான பொதுக்கூட்டத்தினையும் ஒன்று கூடலையும் நுவரெலியாவில் வெகுவிமர்சையாக் நடத்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம். இந்த நிகழ்வின் ஊடகத்துறைக்கு நீண்டககாலம் சேவையாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்
ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.தியாகு மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: