சனி, 21 ஆகஸ்ட், 2010

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் பல வகையான பூக்கள்







நுவரெலியா மாநகர சபையினால் நிருவகிக்கப்படுகின்ற விக்டோரியா பூங்காவில்
தற்போது பலவகையான பூக்கள் மலர்ந்துள்ளதால் இதனைக் கண்டுக்களிப்பதற்கு
வெளிநாட்டு உள்நாட்டு உல்லாச பயணிகள் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்தப்பூங்காவில் உலாவுதவற்கு சிறுவர்களும் மிகுந்த ஆர்வம் செலுத்தி
வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

மலையகப் பஸ்சேவை குறித்து முரளிரகுநாதன் பேச்சுவார்த்தை










அட்டன் பஸ் டிப்போவினால் மலையகப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்ற
பஸ்சேவைகள் குறித்து ஜனநாயகத்தொழிலாளர் காங்;கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் அட்டன் பஸ் டிப்போவின் முகாமையாளரைச் சந்தித்து அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார். இதன் போது தோட்டப்பகுதி மக்களின் நலன் கருதி உரிய பஸ்சேவைகளை நடத்துவதற்கு இந்தப்பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு காணப்பட்டதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் மேலும் தெரிவித்தார்.

கெலிவத்தைத்தோட்ட முதியோர் சுற்றுலாப் பயணம்.



பத்தனை கெலிவத்தை தோட்ட நிருவாகமும் எப்.எல்.ஓ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த சுற்றுலா பயணத்தின் போது இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த ஓய்வுப்பெற்ற தொழிலாளர்கள் 40 பேர் இன்று பங்கு பற்றியுள்ளனர். இவர்கள் இன்று இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் கண்டி
மாவட்டத்திலுள்ள சில இடங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
.

பொகவான தோட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம்









பொகவந்தலாவை பொகவான தோட்ட முகாமையாளரின் ஆலோசனைக்கேற்ப பொகவான சமூக அபிவிருத்தி அரங்கத்தின் ஒத்துழைப்புடன் டெங்கு நோய்த்தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வீதி நாடகமொன்று பொகவான ,பிரிட்வெல் ,லின்ஸ்டெட் ஆகிய
தோட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த வீதி நாடகக்குழுவில் சுகாதார தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய மாகாணத்தில் பிறப்புச்சான்றிதழ் இன்றி 50 ஆயிரம் பேர்











மத்திய
மாகாணத்தில் பிறப்பு அத்தாட்சிப்பத்திரமின்றி சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வாழ்கின்றனர் என்று மிதுரசேன நிறுவனத்தின் இயக்குநர் காமினி ஜெயசூரிய தெரிவித்தார். நாவலப்பிட்டி கலாசார சமூகநல நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று நாவலப்பிட்டி நகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற பிரஜைகள் வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். நுவரெலியா ,கண்டி ,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழுகின்றோர்கள் மத்தியிலேயே பிறப்புச்சான்றிதழ் ,மரண சான்றிதழ் மற்றும் திருமண சான்றிதழ்
இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான அத்தியயாவசிய ஆவணங்கள் இல்லாதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு தகுதியான நிறுவனங்களின் ஊடாக உரிய நாவலப்பிட்டி
கலாசார சமூகநல நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மலையகத்தில் வாழைப்பழங்களில் விலை அதிகரிப்பு

மலையக நகரங்களில் வழைப்பழ வகைகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். புளிவழைப்பழம் ஒரு கிலோ 70 ரூபா முதல் 80 ரூபா வரைளிலும் இறப்பர் வாழை ஒரு கிலோ 75 ரூபா முதல் 80 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாவலப்பிட்டி ,ஹட்டன் ,கம்பளை ,தலவாக்கலை ,பொகவந்தலாவை ,நோர்வூட் ,மஸ்கெலியா போன்ற நகரப்பகுதிகளிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினாலேயே வாழைப்பழங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் சீரற்ற காலநிலை

மத்திய மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக அடைமழை பெய்து வருவதால்
மக்களின் இயல்பு வாழக்கைப்பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மாகாணத்தில் நுவரெலியா ,கண்டி ,மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவுகின்ற சீரற்ற கால நிலையால் அதிகரித்து குளிர் நிலை காணப்படுவதோடு மேக மூட்டமும் தாழிறங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றது.

ஹட்டனில் குளவி கொட்டியதில் 28 பெண்தொழிலாளர்கள் பாதிப்பு





அட்டன் டிக்கோயா லெதண்டி தோட்டத்தில் இன்று 21 ஆம் திகதி கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களைக்குளவிகள் சூழ்ந்து தாக்கியதில் 28 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டுச்சென்ற போது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்ற 19 பேர் உரிய சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியுள்ளனர் .மேலும் 9 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதே வேளை லெதண்டி தோட்டத்தேயிலை மலைகளில் குளவி கூடுகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றமைக்குறிப்பிடத்தக்கது.

ஹட்டனில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்











அட்டன் - கினிகத்தேனை பிரதான பாதையில் குயில்வத்தைத்தோட்டத்துக்கு அருகில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த இருவர் வட்டவளை மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் போது லொறி ஒன்று கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று 21 ஆம் திகதி அதிகாலை அட்டனிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற லொறி ஒன்று குயில்வத்தை தோட்டத்துக்கு அருகில் அதிகாலை 4 மணியளவில் சென்று கொண்டிருந்த போது காட்டுப்பன்றி ஒன்று பாதையைக் கடக்க முற்பட்ட போது லொறியின் சாரதி லொறியைச்சடுதியாக நிறுத்த முற்பட்டதால் லொறி திடீரென பாதையை விட்டு விலகி பள்ளத்தில் புரண்டுச்சென்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன் போது லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் அட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவல் : அட்டன் ஆர். ரஞ்சன்