மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
நீர் மின்திட்டத்தினால் தொழிலாளர்களுக்குப்பாதிப்பு : முரளிரகுநாதன் தெரிவிப்பு
பொகவந்தலாவை கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சிறிய நீர்மின் உற்பத்தி திட்டத்தினால் கிடைக்கவுள்ள வருமானத்தில் ஒரு தொகைப்பங்கை இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்களுக்குப்பகிர்ந்து கொடுப்பதற்கு தோட்ட நிருவாகம் முன்வரவேண்டும் என்று இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து
வருவதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது :
கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்திற்கு தான் நேரடியாக விஜயம் செய்து தோட்டத்
தொழிலாளர்களைச்சந்தித்துப்பேசிய போதே இந்த வேண்டுகோளை அவர்கள்
என்னிடம் விடுத்துள்ளனர்.கேர்க்கஸ்வோல்ட் தோட்டத்தின் கெசல்கமுவஓயா ஆற்றோரத்தில் உள்ள தேயிலைபயிர்ச்செய்கைப்பிரதேசத்தில் தற்போது தோட்ட நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் சிறியளவிலான நீர்மின் உற்பத்தித்திட்டமொன்று மோற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தத்திட்டத்திற்காக குறிப்பிட்டளவு தேயிலை நிலங்களும் தோட்டத்தொழிலாளர்கள் தமது கால்நடைகளுக்குத் தேவையான புற்களுக்காக பயன்படுத்தி வந்த நிலங்களும் அபகரிக்கபட்டு அந்தப்பகுதியில் தற்போது இந்த நீர் மின் உற்பத்தித்திட்டம் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் தமது வருமானத்தினை இழக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த நீர் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து உரிய நஷ்டஈடு அல்லது வருமானத்தினைப் பெற்றுத்தருவதற்கு கேர்க்கஸ்வோல்ட் தோட்ட நிருவாகம் முன்வரவேண்டுமென்று தொழிலாளர்கள் கடிதமொன்றில்
கையெழுத்திட்டுக்கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் இவ்விடயம் தொடர்பாக உரிய தோட்ட நிருவாகத்துடன் பேசுவதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக