மலையக உயர்கல்வித்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் ஆசிரியர் கே.ஜீவராஜனின் திடீர் மறைவு மலையகக்கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும் என்று மலையக ஆசிரியர் ஒன்றியத்தின் பிரதம இணைப்பாளர் சங்கரமணிவண்ணன் அறிவித்துள்ளார்..
அன்னாரின் பிரிவால் வாடுகின்ற அன்னாரின் குடும்பத்தாருக்கும் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி சமூகத்திற்கும் மலையக ஆசிரியர் ஒன்றியம் தனது ஆழந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகஅவர் மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக நிலவுகின்ற ஆளணி மற்றும் பௌதிக வளப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று 8 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வின் போது முதலமைச்சரின் கவனத்திற்கு தன்னால் கொண்டுவரப்பட்டதாக ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மத்திய மாகாhணசபையின் உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார்.
தோட்டப்பகுதிகளிலுள்ள தொடர் குடியிருப்புக்களில் அடிக்கடி ஏற்படுகின்ற தீவிபத்துக்கள் தொடர்பிலும் கண்டி ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்ற நியாயமான போராட்டம் குறித்தும் மத்திய மாகாணசபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் இராஜரட்ணம் இன்று 8 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வின் போது மத்திய மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக