திங்கள், 7 ஜூன், 2010

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவுள்ளதாக மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் உறுதி

நுவரெலியா நகரப்பகுதிகளில் வாழுகின்ற விவசாய மக்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.நுவரெலியாவுக்கு விஜயம் செய்த இவர் இந்தப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து அமைச்சர் கவனம் செலுத்தினார்.


அத்துடன்
மழைக்காலங்களில் நுவரெலியா நகர விவசாயிகள்
பாதிக்கப்படுவதற்கு காரணமான கால்வாய் ஒன்றினை விரைவில் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

தகவல் : நுவரெலியா சூரியன் தியாகு

கருத்துகள் இல்லை: