தோட்டத்தொழிலாளர்களின் சுகாதார நலனோம்பு தொடர்பில் தற்போது பல தரப்பினாலும் கவனம் செலுத்தப்படுகின்ற இன்றைய காலத்தில் பெருந்தோட்டக்கம்பனிகள் சில தத்தமது தோட்டங்களில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் மனதினை வென்றெடுக்கும் வகையில் சில திட்டங்களை எடுத்து வருகின்றன.தேயிலை மலைகளிலும் தேயிலைத்தொழிற்சாலைகளிலும் தொழில் செய்கின்றவர்கள் அழுக்கான ஆடைகளுடன் தான் தொழில் புரிய வேண்டும் என்ற நிலைமை மாறி நாகரீக காலத்திற்கேற்ப சொகுசான ஆடைகளுடன் தொழிலுக்குச்செல்கின்ற நிலைமை தற்போது மலையகப்பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது. வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து அண்மைக்காலமாக ஊடகங்கள் ஆதரபூர்வமாக தகவல்களை வெளியிடத்தொடங்கியமையைத்தொடர்ந்து பெருந் தோட்டக்கம்பனிகளும் தாம் தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களின் நலன் கருதி மேற்கொள்கின்ற திட்டங்கள் குறித்து ஊடகவியலாளரகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது. இதே வேளை பொகவந்தலாவை பகுதிகளிலுள்ள சில தோட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து தோட்ட நிருவாகங்கள் சில சுநுளுவு சுழுழுஆ என்றழைக்கப்படுகின்ற ஓய்வறைகளையும் தேயிலை மலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட நாவலப்பிட்டி பிரதேசங்களிலுள்ள தோட்டங்கள் சிலவற்றில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரொசான்ராஜதுரையின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் குயின்ஸ்பெரி தோட்டத்தொழிலாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட தொழில்சார்தேர்ச்சிப்போட்டியில் தத்தமது திறமைகளை வெளிப்படுத்திய தொழிலாளர்களுக்குப்பெறுமதி வாய்ந்த பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டமைக்குறிப்பிடத்தக்கது. இவ்வாறானதொரு நிலையில் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனிக்கு உட்பட்ட நாவலப்பிட்டியவைச்சேர்ந்த இன்னொரு தோட்டமான கெட்டபுலா தோட்டத்தேயிலைத்தொழிற்சாலையில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களின் நலன் கருதி ஆநுயுடுளு சுழுழுஆ என்றழைக்கப்படுகின்ற உணவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.சுகாதார மற்ற சூழலில் தமது உணவினை உண்ட இந்தத்தேயிலைத்தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு இந்த உணவறையில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.இதே வேளை இந்தத்தேயிலைத்தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு சவுரியமான சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.இடுப்பில் படங்கைக் கட்டிக்கொண்டும் கந்தையான ஆடைகளை அணிந்து கொண்டும் தொழில் புரிந்த தொழிலாளர்கள் தற்போது வண்ண நிறத்திலான சீருடைகளுடன் தொழில் புரிவதை பார்க்கின்றவர்களுக்கு அந்தத்தொழிலாளர்கள் மீது மரியாதை உணர்வை ஏற்படுத்தும் என்பது உளவியல் ரீதியான செயற்பாடாகும்.இவ்வாறான முன்மாதிரியான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்ற தோட்ட நிருவாகங்கள்,கம்பனிகள் பாராட்டப்படவேண்டியனவாகும். சுமார் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆநுயுடுளு சுழுழுஆ ரூ சுநுளுவு சுழுழுஆ திறப்பு விழாவில் பிரதம அதிதியாக காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் சந்தைப்படுத்தல் பொதுமுகாமையாளர் உபாலி பிரேமலால் கலந்து கொண்டார்.அத்துடன் அவருடன் காவத்தைப்பெருந்தோட்டக்கம்பனியின் மனிதவள அபிவிருத்தி பொறுப்பாளர் எஸ். ராம்; ,கெட்டபுலா தோட்ட முகாமையாளர் ராம்தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக