வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் உறுதி செய்து கொள்வதற்கு இனரீதியான வாக்களிப்பு முறை அவசியம் : எஸ்.முருகையா



மலையகத்தில் இனரீதியான வாக்களிப்பு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாகவே தமிழ் மக்கள் சார்பான அரசியல் பிரதிநிதித்துவத்தினை உள்@ராட்சி மன்றங்களில் உறுதி செய்து கொள்ள முடியுமென்று அகில இலங்கை ஐக்கிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் எஸ்முருகையா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். :இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1948 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க பிரஜாஉரிமை சட்டத்தின் மூலம் இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் வாக்குரிமையற்று வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 1977 ஆம் ஆண்டுக்குப்பின்பு இந்திய வம்சாவளித்தமிழ் மக்கள் வாக்குரிமையைப்பெற்றுக்கொண்ட போதும் பெரும்பான்மையினக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் எமது மக்கள் சார்பான அரசியல் பிரதிநிதித்துவம் படிப்படியாக இழக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. எமது வாக்குளால் பெருபான்மைக்கட்சிகள் வெற்றிப்பெறுகின்ற போதிலும் எமது தமிழ் பிரதிநிதித்தவம் இல்லாமல் செய்யப்படுகின்றது.இதனை நாம் தற்போது நடைமுறையில் உணர்ந்துள்ளோம்.எனவே எதிர்வரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் பஸ்பாகை கோரளை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து கொள்ளும் வகையில் மண்வெட்டி சின்னத்தில் எமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். பெருபான்மையினக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதன் மூலம் எமது தனித்துவம் இழக்கப்படுவதோடு எமது அரசியல் பிரதிநிதித்துவத்தினையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே இந்தத் தேர்தலில் நாம் இனரீதியான வாக்களிப்பு முறை ஒன்றினை கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும்.இதே வேளை எமது நாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் பெண்களாவர்.அத்துடன் தொழிற்துறையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களும் பெண்களாவர்.எனினும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே உள்ளது.எனவே இதனைக்கருத்திற்கொண்டு இந்தத்தேர்தலில் போட்டியிடுகின்ற பெண் வேடபாளர்களை வெற்றிப்பெறச்செய்வது எமது சமூகக் கடமையாகும். எனவே பஸ்பாகை கோரளை பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற தொழிலாளர் சார் வேட்பாளர்களையும் பெண்கள் சார்பாக போட்டியிடுகின்ற பெண் வேட்பாளரையும் வெற்றிப்பெறச்செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை: