மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 16 ஜூலை, 2010
மலையகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தற்கொலைகள்
மலையகத்தில் அண்மைக்காலமாக தற்கொலை செய்துகொள்கின்ற எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து பல்வேறு தரப்பினராலும் கவலைத்தெரிவிக்கப்படுகின்ற இந்தச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குறுகிய காலத்துக்குள் நான்கு பெண்களின் திடீர் தற்கொலையானது மலையகத்தின் பக்கம் சகலரினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது. ஏற்கனவே பொருளாதார துறையிலும் உட்கட்டமைப்பு உட்பட பல்வேறு வகையில் பின்தங்கிய சமூகமாக கருதப்படுகின்ற மலையகப்பெருந்தோட்டச்சமூகத்தில் தற்கொலை சம்பவங்களும் புதியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் மலையகத்தில் கடந்த 14 ஆம் 15 ஆம் திகதிகளில் இடம் பெற்ற வௌ;வேறு சந்தர்ப்பங்களில் பாடசாலை மாணவி உட்பட நான்கு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பொகவந்தலாவை பிரதேசததிலுள்ள வௌ;வேறு தோட்டங்களில் குறுகிய காலத்துக்குள் மூன்று மரணசம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை பொகவந்தலாவைப்பிரதேச மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூன்று பெண்களில் இரண்டு பெண்களின் மரணங்கள் தற்கொலையா கொலையா என்பது குறித்த விசாரணைகள் இதுவரை முற்றுப்பெறவில்லை. இந்தச்சம்பவம் தொடர்பாகமேலும் தெரியவருவதாவது : பொகவந்தலாவை கியூ மேற்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த 65 வயதுடைய ஆரோக்கியம்மாள் என்ற குடும்ப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று 14 ஆம் திகதி இரவு இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மேற்படி பெண் தனக்குத்தானே தீமூட்டிக்கொண்டதால் வீட்டுப்பகுதியிலிருந்து புகைக்கிளம்பி வருவதை அவதானித்த தோட்ட மக்கள் குறிப்பிட்ட இடத்திற்குச்சென்று அவதானித்த போதும் அந்தப்பெண் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய அதிகாரி ஜெயசூரிய தெரிவித்தார். இதேவேளை பொகவந்தலாவை ஜெபல்டன் டி.பி தோட்டப்பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண்; 15 ஆம் திகதி காலை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் . குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென்று தெரிய வருகின்றது.இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் 15 ஆம் திகதி மாலை 3 மணியளவில் பொகவந்தலாவை குயினாத் தோட்டத்தைச்சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவர் கழுத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மரணத்திலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த யுவதியின் சடலத்தை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.. இந்த மூன்று மரண சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் பொகவந்தலாவைப்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மூன்று மரணங்களில் தற்போதைய ஒரு மரணம் மாத்திரம் தற்கொலை என்று நிரூபிக்கப்டுள்ளது.ஏனைய இரண்டு மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த முடிவு சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கைக்குப்பிறகே தெரிய வரும்.
இவ்வாறானதொரு நிலையில் கண்டி மாவட்டம் புசல்லாவை சவுக்குமலைத்தோட்டத்தைச்சேர்ந்த புசல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்விக்கற்கின்ற 16 வயது மாணவி ஒருவர் 15 ஆம் திகதி காலை; வேளையில் தனது வீட்டினுள் கழுத்தில் சுறுக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளi மலையக மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படவுதவி : புசல்லாவை திருஞானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக