மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
திங்கள், 19 ஜூலை, 2010
இலங்கைத்தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் முன்வாரீர் : அமைச்சர் கெஹலிய அழைப்பு
போருக்குப்பின்னரான இலங்கைத்தேசத்தைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்குச் சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல்ல தெரிவித்தார்
கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக கடந்த இன்று ஆம் திகதி கண்டி சுவிஸ் விருந்தகத்தில் இடம் பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சினாலும் அரசாங்க தகவல் திணைக்களத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச்செயலமர்வில் போருக்குப்பின்னரான சர்வதேச சவால்கள் என்ற தலைப்பிலும்; மக்கள் சபையின் மூலமாக மக்களின் பங்களிப்பினை கட்டியெழுப்புவோம் என்ற தலைப்பிலும்; விரிவுரைகள் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதம பணிப்பாளர்; பேராசிரியர்.ஆரியரட்ன அத்துகல ,மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ .பி.கனேகல ,பேராசிரியர் லக்ஸ்ரீபெர்னாண்டோ ,பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்ம திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :
உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரமான பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டவர்களுடனான யுத்தத்தில் நாம் இன்று வெற்றிப்பெற்றுள்ளோம்.எமது நாட்டு மக்களின் 30 வருட கால கனவினை நனவாக்கிக்கொண்டுள்ளோம். இன்று நாம் உலகத்திற்கு முன்பு கம்பீரமாக நிற்கின்றோம். யுத்தத்தின் மூலம் பயங்கரவாதத்தை வெற்றிக்கொண்ட நாம் சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதே இன்றைய முக்கிய பணியாகும். யுத்தத்தை வெற்றிக்கொண்ட எமது நாட்டின் தலைமைத்துவம் இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் முன்னின்று செயற்படும். இதற்காக ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இந்த நாட்டின் ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக எதிர்காலத்தில் பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.ஊடகவியலாளர்கள் எனது நண்பர்கள் என்ற ரீதியில் அவர்களின் தேவையறிந்து சேவைசெய்வதற்கும் நான் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக