மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்று முரளிரகுநாதன் தெரிவிக்கின்றார்.
கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் தற்போது ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக ஜனநாயகத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு நேரடியாக விஜயம் செய்து அந்த மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் இடம் பெற்ற சந்திப்புக்குப் பிறகு கருத்துத்தெரிவித்த போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத்தெரிவிக்கையில் :
கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் நீர்பற்றாக்குறை ,சிற்றூழியர் பற்றாக்குறை மற்றும் உள்ளகத்தொலைத்தொடர்பாடல் வசதியின்மை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. இவற்றினை மத்திய மாகாணசுகாதார அமைச்சின் ஊடாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் .அத்துடன் எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் மூலமாக உள்ளகத்
தொலைத்தொடர்பாடல் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக