நுவரெலியா ஹைபொரஸட் இலக்கம் மூன்று தமிழ் வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவர்களின் 19 பேர் ஒருவகையான கிருமிநாசினியைச் சுவாசித்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப்பாடசாலையின் அருகிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் இன்று 23 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் பயிர்களுக்குக் கிருமிநாசினி விசிறியுள்ளார்கள்.
இந்தக்கிருமி நாசினி காற்றுடன் கலந்து பாடசாலை சூழலில் பரவியதால் மூன்றாம் தவணைப்பரீட்சை எழுதிக்கொண்டிருந்த தரம் 10 மற்றும் தரம் 11 வகுப்புக்களைச்சேர்ந்த மாணவர்கள் சிலர் சுவாசித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கமும் குமட்டலும் வயிற்றுவலியும் ஏற்பட்டதால் உடனடியாக ஹைபொரஸட்; வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர்.
இதன் பின்பு இவர்களில் நான்கு மாணவிகளும் 15 மாணவர்களும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது சிகிச்சைப்பெற்றுவருகின்றனர் என்று ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் தெரிவித்தார்..
இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதே வேளை இந்தச்சம்பவம் தொட்ரபாக நுவரெலியா பொலிஸ் நிலையப்பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பாடசாலை அதிபர் பி.சண்முகநாதன் மேலும் தெரிவித்தார்.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 23 நவம்பர், 2010
திங்கள், 22 நவம்பர், 2010
நாவலப்பிட்டியவில் நீரிழிவு தின நிகழ்வு
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நாவலப்பிட்டி நகரசபையின் ஏற்பாட்டில்
நாவலப்பிட்டி நகரசபை மண்டபத்தில் நீரிழிவு நோயாளர்களுக்கான
மருத்துவ சிகிச்சை முகாமொன்று இடம் பெற்றது.
இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட நீரிழிவு நோயாளர்களுக்கு நாவலப்பிட்டி வைத்தியசாலையின் வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
நாவலப்பிட்டி மக்கள் வங்கியின் இதுரும் சேமிப்பு கணக்குகள் திறப்பு
ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பனை முன்னிட்டும் சேமிப்பினை ஊக்குவிக்கும் பொருட்டும் நாலப்பிட்டி மக்கள் வங்கி கிளையில் இன்று விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டீருந்தது. முக்கள் வங்கியின் நாவலப்பிட்டி கிளையின் முகாமையாளர் திருமதி எஸ்.இஹலவத்தை தலமையில் வங்கி உத்தியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்கள் கலந்து கொணடனர். இதன் போது வாடிக்கையாளர்களுக்கு ஆஸ்சர்யய இதுரும் சேமிப்புப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
தலவாக்கலை மேல்கொத்மலை நீர் சுரங்கப்பாதையைப் பெருந்திரளானோர் பார்வையிட்டனர்.
தலவாக்கலை பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் மேல்கொத்மலை நீர்மின்திட்டத்தின் நீர் விநியோக சுரங்கப்பாதையைப் பொதுமக்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் நேற்று 21 ஆம் திகதி வரை பெருந்திரளாக திரண்டு வந்து பார்வையிட்டனர்.தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்துஇந்த நீர் சுரங்கப்பாதையினுள் பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனையவர்கள்ஆர்வத்துடன் சென்று வந்தமைக்குறிப்பிடத்தக்கது.
12.9 கிலோமீற்றர் தூரமுள்ள இந்த நீர் சுரங்கப்பாதை இலங்கையில் மிகவும் நீளமானசுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நீர் சுரங்கப்பாதையை மீண்டும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம்
கிடைக்குமா என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் நீர்சுரங்கப்பாதையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இம்மாதம் 4 ஆம் திகதி பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தமைக்குறிப்பிடத்தக்கது.
வெள்ளி, 5 நவம்பர், 2010
மலையகத்தீபாவளி
மலையகப்பெருந்தோட்டப்பகுதி மக்களும் இன்றைய தீபாவளி பண்டிகையை விசேடமாக கொண்டாடினர்.பெரும்பாலான மக்கள் இன்று அம்மாவாசை விரதம் என்பதால் நேற்றிரவு படையல் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.தமது இறந்த உறவினர்களை நினைத்து அவர்கள் சாட்பிட்ட உணவு வகைகளையும் புத்தாடைகளையும் இந்தப்படையலில் வைத்து பூஜைகளில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் மலையகப்பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களுக்கு புத்தாடை அணிந்து சென்ற மக்கள் பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர். இதேவேளை 21 நாள் கௌரி விரதம் மேற்கொண்டவர்கள் இன்று இறுதி நாள் பூஜைகளில் ஈடுபட்டனர்.இந்தப்பூஜை தொடர்பான நிகழ்வுகள் பொகவந்தலாவை ஸ்ரீ தண்டாதபாணி ஆலயத்தில் இன்று பிற்பகல் இடம் பெற்றது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)