தலவாக்கலை கொத்மலை ஓயா ஆற்றில் பெயார்வெல் தோட்டத்துக்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தினை இன்று பிற்பகல் வேளையில் லிந்துலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமான மீட்கப்பட்டவர் அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தைச்சேர்ந்த செபஸ்டியன் ஞானசுந்தரி ( வயது 55 ) என்ற பெண்ணாவார். இவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையின் சவச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் இன்று காலை அக்கரப்பத்தனையிலிருந்து தலவாக்கலைக்குச் செல்வதற்காக பஸ் ஒன்றில் வந்துகொண்டிருந்துள்ளார். லிந்துலை நகரில் பஸ் நிறுத்தப்படவே உறவினர்களுக்குத் தெரியாமல் பஸ்ஸை விட்டு அந்தப்பெண் இறங்கியுள்ளார்.மனநோயால் பாதிக்கப்பட்டவரென்று சந்தேகிக்கப்படுகின்ற இவர் லிந்துலை நகருக்கு அருகிலுள்ள கொத்மலை ஓயா ஆற்றோரத்துக்குச் சென்றிருந்த போது ஆற்றில் தவறி விழுந்திருக்கலாமென்று லிந்துலை பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக