புதன், 18 மே, 2011

நாவலப்பிட்டியவில் வெசாக் பந்தல்











2600 ஆம் ஆண்டு புத்த ஜயந்தியை முன்னிட்டு இம்முறை நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெசாக்பண்டிகை மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. முக்கிய நகரங்களில் வெசாக் பந்தல்கள் ,கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றினைக்கண்டு களிப்பதில் பொதுமக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பல்லின மக்கள் செறிந்து வாழுகின்ற நாவலப்பிட்டி நகரில் இம்முறை அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தலின் தோற்றத்தினை இங்கு காணலாம்.

சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப்பருவக்காலம் இன்றுடன் நிறைவு

2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பூரணைத்தினத்துடன் ஆரம்பமான இந்த யாத்திரைப்பருவக்காலம் இன்றுடன் பூர்த்தியாவதை முன்னிட்டு சிவனொளிபாதமலையில் பிரதிஷ்டைச்செய்யப்பட்ட சமன் தேவ விக்கிரமும் மற்றும் பூஜைப்பொருட்களும் இன்று பிற்பகல் வேளையில் மலை உச்சியிலிருந்து மலையின் அடிவாரத்துக்குக்கொண்டு கொண்டு வரப்பட்டு நாளை காலை 6 மணி வரை நல்லத்தண்ணி சமன் தேவாலயத்தில் வைக்கப்படவுள்ளன. இதனைத்தொடர்ந்து நாளை காலை சமன் தேவ விக்கிரமமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரதபவனி நல்லதண்ணி ,மவுசாகலை ,டபள்கட்டிங் ,லக்ஷபான ,கலுகல ,கிதுல்கல ,யட்டியன்தோடடடை ,அவிசாவளை ,இரத்தினபுரி ,ஊடாக பெல்மதுளை ஸ்ரீபாத இரஜமஹா விகாரைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இவ்வருடத்துக்கான சிவனொளிபாதமலைக்கான யாத்திரைப்பருவக்காலம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் பூரணைத்தினத்துடன் ஆரம்பமாகவுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 17 மே, 2011

நாவலப்பிட்டியவில் மல்லியப்பு சந்தி அறிமுக விழா









நாவலப்பிட்டி
தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் திலக்ராஜ் எழுதிய மல்லியப்பு சந்தி கவிதை தொகுப்பில் அறிமுக விழா ஒன்று நாவலப்பிட்டி இந்து கலாசார மண்டபத்தில் 17 ஆம் திகதி நேற்று இடம் பெற்றது. மூத்ததொழிற்சங்கவாதி இரா.தங்கவேலு தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளரும் ஆசிரியருமான சோ.ஸ்ரீதரன் ,ஆசிரியை திருமதி ஷாஹிராபானு மற்றும் அ.லெட்சுமணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் திலகராஜ் ஏற்புரைவழங்கினார்.

ஞாயிறு, 15 மே, 2011

தலவாக்கலையில் சம்பள போராட்டம் : தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்பு

தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவை வலியுறுத்தியும் கூட்டொப்பந்தப்பேச்சுவார்த்தையினை விரைவு படுத்தக்கோரியும் கூட்டொப்பந்தம் சாரா தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றினை நடத்தின. இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் ,வி.இராதாகிருஸ்ணன் ,மத்தியமாகாணசபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் ,முரளிரகுநாதன் , முன்னாள் பிரதியமைச்சர்களான வடிவேல்சுரேஷ் ,வி.புத்திரசிகாமணி மத்திய மாகாண முன்னாள் தமிழ்க்கல்வியமைச்சர் எஸ்.அருள்சாமி உட்பட முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களகலந்து கொண்டனர். தலவாக்கலை பிரதான பேருந்து நிலையப்பகுதியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப்பேணியில் கலந்து கொண்டவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் வாழக்கைச்செலவுக்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும்.அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா வேண்டும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்தப்பேரணியைத்தொடர்ந்து தலவாக்கலை நகரமத்தியில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர்கள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.

கூட்டொப்பந்தம் சாரா தொழிற்சங்க முக்கியஸ்தர்களின் ஒன்று கூடல்











தோட்டத்தொழிலாளர்களின்
சம்பள விடயம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று கூட்டொப்பந்தம் சாரா தொழிற்சங்கங்களின் முக்கிஸ்தர்களுக்கிடையில் மலையத் தேசிய தொழிலாளர் சங்கத்தின் கொட்டகலை நகரிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்தப்பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணன் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினரமான எஸ்.சதாசிவம் பெருந்தோட்டத்தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான வடிவேல் சுரேஸ் மலையத் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.புத்திரசிகாமணி மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ்.லோரன்ஸ் ,அஸீஸ் ஜனநாயகத்தொழிலாளர்காங்கிரஸின் பொதுச்செயலாளர் பி.எம்.லிங்கம் நிதிச்செயலாளர் நல்ல செல்வம் தொழிலாளர் ஒத்தழைப்புச் சங்கத்தின் முக்கியஸ்தர் சிவப்பிரகாசம் ஆகியோர் ஈடுபட்டனர்.