மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
ஞாயிறு, 15 மே, 2011
தலவாக்கலையில் சம்பள போராட்டம் : தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்பு
தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவை வலியுறுத்தியும் கூட்டொப்பந்தப்பேச்சுவார்த்தையினை விரைவு படுத்தக்கோரியும் கூட்டொப்பந்தம் சாரா தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 15 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்றினை நடத்தின. இந்தக்கவனயீர்ப்புப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம் ,வி.இராதாகிருஸ்ணன் ,மத்தியமாகாணசபை உறுப்பினர்களான எஸ்.சதாசிவம் ,முரளிரகுநாதன் , முன்னாள் பிரதியமைச்சர்களான வடிவேல்சுரேஷ் ,வி.புத்திரசிகாமணி மத்திய மாகாண முன்னாள் தமிழ்க்கல்வியமைச்சர் எஸ்.அருள்சாமி உட்பட முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களகலந்து கொண்டனர். தலவாக்கலை பிரதான பேருந்து நிலையப்பகுதியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப்பேணியில் கலந்து கொண்டவர்கள் தோட்டத்தொழிலாளர்களின் வாழக்கைச்செலவுக்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும்.அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா வேண்டும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்தப்பேரணியைத்தொடர்ந்து தலவாக்கலை நகரமத்தியில் இடம் பெற்ற கூட்டத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர்கள் தமது கோரிக்கை நிறைவேற்றப்படாது விட்டால் மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக