தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டில் ஹங்குரன்கெத்த பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் 10 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் சிறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதற்கேற்ப ஹோப் தோட்டக் கீழ்ப்பிரிவில் ஒற்றையடிப்பாதை அபிவிருத்திச் செய்வதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ஹோப்தோட்ட மேற்பிரிவு ஒற்றையடிப்பதையைச் செப்பனிடுவதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் முல்ஓயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் ஒற்றையடிப்பதை ஒன்றைச் செப்பனிடுவதற்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ரட்லண்ட் தோட்டப்பாதை செப்பனிடலுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் ஹேவாஹெட்ட ஹோப் தோட்ட பாதை புனரமைப்புக்கு இரண்டு இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக