ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஆஞ்சநேயரின் முகம் போன்ற தோற்றத்தில் வண்ணத்துப்பூச்சி


அட்டன் செனன் தோட்டத்தில் வித்தியாசமான முகத்தோற்றத்தில் வண்ணத்துப்பூச்சி ஒன்றை தோட்ட மக்கள் இனங்கண்டுள்ளனர். அட்டன் செனன் தோட்டத்தில் வசிக்கும் மருதமுத்து சுப்பையா வீட்டில் தற்போத அந்தப் பூச்சி உள்ளது.
சுப்பையாவின்  மனைவி கடந்த வெள்ளிக்கிழமைக் காலை வீட்டில் உடைகளை கழுவி உலர்த்துவதற்கு வெளியில் வந்த பொழுது கூரையில் வித்தியாசமான பூச்சியொன்று இருப்பதை அவதானித்து கணவரிடம் கூறியுள்ளார். இந்தப்பூச்சித் தொடர்பாக தோட்டத்தின் கோவில் குருக்களிடம் கேட்ட போது  அவர் ஆஞ்சநேயர் முகத்துடன் கூடிய வண்ணத்து பூச்சியொன்று கூறி வீட்டின் சுவாமி படங்களின் முன் வைக்குமாறு கூறியுள்ளார். இந்த வண்ணத்து பூச்சியின் தலைப்பகுதி  ஆஞ்சநேயரின் முகம் போன்று அமைந்துள்ளது.எனினும் இந்தப்பூச்சி  வீட்டை விட்டு செல்லாமல் அவ்விடத்திலேயே உள்ளதாக வீ;டார் தெரிவிக்கின்றனர். அதிகளவிலான மக்கள் வண்ணத்துப் பூச்சியைப் பார்வையிட வருவதாக அவர் தெரிவித்தார். மற்றவர்களுக்கு தெளிவாக காட்ட வண்ணத்து பூச்சை பூவுடன் அவர் கையில் எடுத்து வெளியில் கொண்டு வந்த பொழுதும் அது பறக்காமல் அவரின் கையிலேயே இருந்தது.

சனி, 3 நவம்பர், 2012

திகாம்பரம் எம்.பி தலைமையில் தலவாக்கலையில் கொங்ரீட் பாதைகள் திறந்து வைப்பு




தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் தலவாக்கலை ஹொலிரூட் , லோகி , தலவாக்கலை ஆகிய தோட்டங்களில் செப்பனிடப்பட்டுள்ள கொங்ரீட் பாதைகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலுறவு மற்றும் நிருவாகத்திற்கான சிரேஸ்ட ஆலோசகரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சிங்.பொன்னையா , தேசிய அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன் , நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான வி.சிவானந்தன் , கல்யாணகுமார் , அப்துல் அஸீஸ் , யோகேஸ்வரி பிரதேச அமைப்பாளர்களான  ரவிச்சந்திரன் , தமிழ்ச்செல்வன் ,பொதுஜன தொடர்பு அதிகாரி ராமகிருஸ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 1 நவம்பர், 2012

சீரற்ற கால நிலையினால் சாமிமலை பிரதேச தோட்ட மக்களுக்குப் பெரும் பாதிப்பு


 நிலையினால் சாமிமலை பிரதேச தோட்ட மக்களுக்குப் பெரும் பாதிப்பு
மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மஸ்கெலியா சாமிமலை பிரதேசத்தைச்சேர்ந்த தோட்டமக்களின்  நூற்றுக்கணக்கானோர் இடம் பெயர்ந்து தற்காலிக இருப்பிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 31 ஆம் திகதி பிற்பகல் வேளையில் வீசிய புயல்காற்றினால் தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புக்களின் கூரைத்தகரங்கள் காற்றினால் அள்ளுண்டு சென்றதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் தோட்டத்திலுள்ள சனசமூக நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை கிங்காரோ தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சே;ரந்த 47 பேர் தோட்ட ஆலய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை பாகினி தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் தோட்ட நூலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாமிமலை பெயார்லோன் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் தோட்ட பாடசாலை கட்டிடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓமிடல் , சோளங்கந்தை , ஓல்டன் ஆகிய தோட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தோட்ட நிருவாகங்கள் சமைத்த உணவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவசட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச்செயலாளர் எஸ்.ஸ்ரீதரன் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுநாட்களுக்கு பிறகு உயர்வு




காசல்ரீ நீர்த்தேக்கப்பகுதிகளிலுள்ள நீரேந்துப்பகுதிகளில் பெய்த அடைமழையினால் இந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது.
பொகவந்தலாவை , நோர்வூட் , டிக்கோயா , சாஞ்சிமலை , வெஞ்சர் , ஒஸ்போன் போன்ற பகுதிகளில் பெய்த அடைமழையினால் இந்தப்பிரதேசத்திலுள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கேற்பட்டதால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சடுதியாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்து சிலவாரங்களுக்கு முன்பு இந்த நீர்த்தேக்கம் நீர் வற்றிய நிலையில் இருந்தமைக் குறிப்பிடத்தக்கது.