திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டக்கலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓடி காணாமல போன யுவதி நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்வேன்ன காட்டுப் பகுதியில் வைத்து குறித்த யுவதி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்ற பொது மக்கள் யுவதியைக் கண்டு பின் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பத்தனை பொலிஸார் யுவதியை மீட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட யுவதி பயந்து, பேச முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சைகளின் பின்பு குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளார். கொட்டக்கலை - மூங்கில் கொட்டக்கலை (பொரஸ்ட்கிறீக்) பகுதியில் தனது தாய் இறந்த செய்தியைக் கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போன சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தாயின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதன் பின்பே யுவதி வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
செவ்வாய், 7 மே, 2013
தாய் இறந்தமையைத் தாங்கிக் கொள்ளாமல் அதிர்ச்சியில் ஓடிய மகள் உயிருடன் மீட்பு
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டக்கலை பொரஸ்கிறிக் தோட்டத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓடி காணாமல போன யுவதி நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுன்ட்வேன்ன காட்டுப் பகுதியில் வைத்து குறித்த யுவதி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை குறித்த காட்டுக்கு விறகு வெட்டச் சென்ற பொது மக்கள் யுவதியைக் கண்டு பின் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு சென்ற பத்தனை பொலிஸார் யுவதியை மீட்டு கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட யுவதி பயந்து, பேச முடியாமல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிகிச்சைகளின் பின்பு குறித்த யுவதி வீடு திரும்பியுள்ளார். கொட்டக்கலை - மூங்கில் கொட்டக்கலை (பொரஸ்ட்கிறீக்) பகுதியில் தனது தாய் இறந்த செய்தியைக் கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போன சம்பவம் கடந்த 6ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் தாயின் சடலம் அடக்கம் செய்யப்பட்டதன் பின்பே யுவதி வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக