புதன், 2 ஜூன், 2010

தோட்டடத்தொழிலாளர்களுக்கெதிரான கெடுபிடிகள் தொடர்கின்றன : முரளிரகுநாதன் குற்றச்சாட்டு

இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்ற தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு வகையில் அடக்கி ஆளமுற்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது
என்று ஜனநாயத்தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் அட்டன்
பணிபனையில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர்
தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது : கூட்டொப்பந்தம் நடைமுறைக்கு வந்தப்பிறகு தோட்டத்தொழிலாளர்கள் பல்வேறு வகையில் ஒடுக்கப்படுகின்றார்கள்.ஒரு நாள்
சம்பளத்திற்காக பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவினை ஒரு சிலர் மாத்திரம் நிருணயிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தோட்டத்திலும் வௌ;வேறு விதமாக ஒரு நாள் பெயருக்கான கொழுந்தின் நிறை கணிக்கப்படுகின்றது. ஒருசில தோட்டங்களில் 15 கிலோ கொழுந்து பறித்தால் ஒரு நாட் பெயர் வழங்கப்படுகின்றது. ஆனால் மேலும் பல தோட்டங்களில் 19 கிலோ பறித்தால் தான் ஒரு நாட் பெயர் வழங்கப்படுகின்றது.இதனால் தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு பல்வேறு வகையில்
சுரண்டப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலைமையே மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள அப்புகஸ்தென்ன தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே தமது உழைப்பைச் சுரண்டுபவர்களுக்கெதிராக தோட்டத் தொழிலாளர்கள் ஒற்றுமையாக செயற்பட்டு முறியடிக்க வேண்டும். இவ்வாறானதொரு நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வியலையும்
உணர்வுகளையும் புரிந்து கொள்ளாதவர்களைப் பெருந்தோட்டக்கம்பனிகள் தோட்ட அதிகாரிகளாக நியமிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறானதொரு நிலைமை போடைஸ் ௩௦ ஏக்கர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத்தோட்டத்தைச்சேர்ந்த உதவி தோட்ட அதிகாரி ஒருவர் தான் இராணுவத்தில் சேவை செய்துள்ளதாகவும் தொழிலாளர்கள்
குழப்பம் விளைவித்தால் தனது இராணுவ செயலைக்காட்ட வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் கூறியுள்ள அவர் தொழிலாளர்களை அச்சுறுத்தியதோடு இந்தத்தோட்டத்தொழிலாளர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த பாதையினையும் அவர் மூடியதால் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து இந்தத் தோட்டத்தைச்சேர்ந்த தொழிலாளர்கள் கவனயீர்ப்புப்போராட்டமொன்றிலும் ஈடுபட்டனர். எனவே இத்தகைய தொழிலாளர் விரோத செயற்பாடுகளுக்கெதிராக தோட்டத்தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் அத்துடன் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: