பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையின் போக்குவரத்துக்கள் வழமைக்குத்திரும்பின.
பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையில் கெலிவத்தைத் தோட்டத்துக்கு அருகில் காலை இடம் பெற்ற வாகன விபத்தொன்றின் காரணமாக இந்தப்பாதையின் ஊடான
போக்குவரத்துக்கள் சில மணிநேரம் தடைபட்டன.
பத்தனை – நாவலப்பிட்டி பிரதான பாதையில்; குயின்ஸ்பெரித் தோட்டத்திற்கும் கெட்டப+லா தோட்டத்திற்குமிடையில் லொறி ஒன்று பாதையில் குடைசாய்ந்ததால் இந்தப்பாதையின் ஊடான போக்குவரத்துகளுக்குத் தடை ஏற்பட்டது. இதன் போது பத்தனை பொலிஸாரின் அறிவித்தலுக்கேற்ப மாற்றுப்பாதையின் ஊடாக வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெற்றன.
இந்த நிலையில் பிற்பகல் 1 மணிக்குப்பிறகு குறிப்பி்ட பாதையிலிருந்து
லொறியை அப்புறப்படுத்தியதன் பின்பு பத்தனை – நாவலப்பிட்டி பாதையின் போக்குவரத்துக்கள் வழமைக்குத் திரும்பின.
அட்டன் நகரில் நடைபாதை வியாபாரத்துக்குத் தடை
அட்டன் நகரின் பிரதான பாதையோரங்களில் பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்துகின்ற வகையில இடம் பெற்று வந்த வியாபார நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அட்டன் நகர பிதா ஏ.நந்தகுமார் தெரிவித்தார். அட்டன் நகரின் பிரதான பாதையின் இருமருங்கிலும் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த நடைபாதை வியாபாரங்களினால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.இவ்வாறானதொரு நிலையில் அட்டன் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடைபாதை வியாபார நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் நகரபிதா மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக