வெள்ளி, 11 ஜூன், 2010

கண்டி ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்களின் விடயம் மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபையின் கீழ்ச்செயற்படுகின்ற கண்டி ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி என்பன தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து தோட்ட நிருவாகத்தினால் அறவிடப்பட்டுள்ள போதும் அந்த நிதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படாததுக் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரலின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் ஆலோசனைக்கேற்ப மத்திய வங்கியின் ஆளுநருடன் இன்று 11 ஆம் திகதி இடம் பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போதே இவ்விடயம்மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் தெரிவித்தார். ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட ஊழியர் சேமலாபநிதி ,ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றின் 60 கோடி ரூபா இதுவரை உரிய திணைக்களங்களுக்குத் தோட்ட நிருவாகத்தினால் அனுப்பி வைக்கப்படாதது குறித்து ஹந்தானைத் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த வாரம் கவனயீர்ப்புப்போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த நிலையிலேயே ஹந்தானைத்தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கைத்தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு கொண்டுவரப்பட்டது. இதன் போது இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தன்னிடம் தெரிவித்ததாகவும் அத்துடன் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வங்கிகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் மலையகத்தில் கல்விக்கற்ற இளைஞர் யுவதிகளுக்குச் சுயத்தொழில் வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதற்கும் ஆவன செய்யுமாறும் மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்ததாகவும் ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: