மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 2 ஜூலை, 2010
மலையக காமன் கூத்துக்கலைஞர்கள் நாடு திரும்பினர்.
கடந்த வாரம் தமிழகத்தின் கோவை நகரில் இடம் பெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட மலையக காமன் கூத்துக்கலைஞர்கள் நாடு திரும்பியுள்ளனர். உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டிலும் கலைஞர் பிரான்ஸிஸ் ஹெலனின் நெறியாள்கையிலும் காமன்கூத்து நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மலையகத்திலிருந்து 15 கலைஞர்கள் தமிழகத்திற்குச் சென்றிருந்தனர். இந்தக்கலைஞர்கள் காமன் கூத்து நிகழ்வினை சிறப்பாக மேடையேற்றியதன் பின்பு இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வரின் புதல்வியுமான செல்வி கனிமொழி கலைஞர்களைப் பாராட்டினார்.அத்துடன் கலாசார இணைப்பாளர் பீ.ஏ .மணி
பங்கேற்புச்சான்றிதழையும் வழங்கினார். இந்தக்கலைஞர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வருகைத்தந்த போது சென்னை மாவட்ட ஆட்சியாளர் திருமிகு ஷோபனா காமன் கூத்துக்குழுவின் தலைவரான பிரான்ஸிஸ்
ஹெலனுக்குப் பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக