மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வெள்ளி, 2 ஜூலை, 2010
வேலைக்கு அமர்த்தப்படும் பெண்தொழிலாளர்களுக்கான மருத்துவ பிரிசோதனை : பெருந்தோட்டத்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோட்டங்களில் பெண்தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பதாக அவர்கள் கர்ப்பம் தரித்துள்ளார்களாக எனபது குறித்துத் தோட்ட நிருவாகங்கள் மேற்கொண்டு வருகின்ற மருத்துவ பரிசோதனைகள் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ உரிய விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அமைச்சரின்
இந்த நடவடிக்கையைத் தான் வரவேற்பதாக ஜனநாயத் தொழிலாளர்
காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் முரளிரகுநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார். தோட்டப்பகுதிகளில் பெண்களைத் தொழிலுக்கு அமர்த்துவதற்கு முன்பதாக தோட்ட நிருவாகங்கள் தமது தோட்ட வைத்திய
பிரிவின் மூலமாக குறிப்பிட்ட பெண்களைச்சிறு நீர் பரிசோதனைக்கு உட்படுத்தும் சம்பவங்கள் மலையகத்தில் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான பரிசோதனைகள் பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்வதோடு இதுவொரு மனிதவுரிமை மீறலுமாகும். இவ்விடயம் குறித்து
பெருந்தோட்ட கம்பனிகளை வலியுறுத்தும் வகையில் இலங்கை மனித உரிமை
ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை தான் கையளித்துள்ளதாகவும் ஜனநாயத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளிரகுநாதன் மேலும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக