மலையகத்தில் இடம் பெறுகின்ற பல்வேறு நிகழ்வுகள் இங்கு செய்திகளாக தொகுத்து வழங்கப்படும். தொடர்புகளுக்கு : சோ.ஸ்ரீதரன் - 0777244263 - bogosridharan@gmail.com
வியாழன், 29 ஜூலை, 2010
நுவரெலியா நானுஓயாவில் நிலம் தாழ்ந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தற்காலிக இருப்பிடங்களில் வாழ்கின்றனர் : வி.இராதாகிருஷ்ணன் எம்.பி
நுவரெலியா மாவட்டம் நானுஓயா டெஸ்போர்ட் தோட்டத்தில் இந்த மாதம் 7 ஆம் திகதி நிலம் திடீரென தாழ்ந்ததில் நான்கு லயன் குடியிருப்புக்கள் சேதத்துக்கு உள்ளாகின. இந்தக்குடியிருப்புக்களில் வாழந்து வந்த 150 குடும்பங்களைச்சேர்ந்த 600 பேர் தற்போது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடில்களிலும் தோட்ட ஆலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா டெஸ்போர்ட் தோட்டப்பகுதியில் நிலம் தாழந்தத்தில் தோட்டக்குடியிருப்புக்களின் கட்டிடச்சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டதால் இந்தக் குடியிருப்பில் வாழந்தவர்கள் உடனடியாக அப்பறப்படுத்தப்பட்டனர்.
எனினும் பாதிப்பு ஏற்பட்டு பல வாரங்கள் கடந்துள்ள போதும் இதுவரை இவர்களுக்கு உரிய மாற்று குடியிருப்புக்கள் இதுவரை அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்பு பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மகிந்த சமரசிங்கவை இன்று 29 ஆம் திகதி சந்தித்து இவ்விடயம் குறித்து அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் முழு விரபத்தினையும் தனக்கு விரைவில் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சமரசிங்க தன்னிடம் கேட்டுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்
வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தகவல் - படங்கள் : நுவரெலியா சூரியன் தியாகு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக