நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் வைவிடப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.பயணிகள் போக்குவரத்துக்கட்டணங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மீளமைப்புத்தொடர்பாக தாம் நஸ்டத்துக்கு
உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா ,தலவாக்கலை பிரதேசத்தைச்சேர்ந்த தனியார் பயணிகள் போக்குவரத்துத்துறையினர் கடந்த மூன்று நாட்களாக
பணிநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். நுவரெலியா நகரிலிருந்தும் தலவாக்கலை நகரிலிருந்தும் வெளியிடங்களுக்கான தனியார் பயணிகள் போக்குவரத்துக்கள் முறையாக இடம் பெறாததால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. எனினும் நகரங்களுக்கிடையிலான கடுகதி போக்குவரத்துச்சேவைகளும் இ.போ.ச .போக்குவரத்துச்சேவைகளும் முறையாக இடம் பெற்றன. இவ்வாறானதொரு நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த பணிநிறுத்தத்தினை இன்று பிற்பகல் 2 மணிமுதல் திடீரென கைவிட்டதோடு வழமையான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக