கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத்தருகின்ற உல்லாச பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை என்பதால் வாரயிறுதி நாட்களிலும் ஏனைய நாட்களிலும் வெளிமாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் நுவரெலியா மாவட்டத்தின் இயற்கை அழகைக் கண்டுகளிப்பதற்குத் தமது குடும்பம் சகிதம் வருகைத் தருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே வேளை வெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகையும்
இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு உல்லாச பயணிகளின் வரவு
அதிகரித்துள்ளதால் நுவரெலியா நகரிலுள்ள விடுதிகள் ,ஹோட்டல்கள் நடத்துகின்றவர்களின் வருமானமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் நுவரெலியாவுக்குச் செல்லும் உல்லாச பயணிகளில் நலன் கருதி ரயில்வே திணைக்களம் கொழும்பிலிருந்து
நானுஓயாவுக்கு நகர்சேர் கடுகதி சேவை ஒன்றையும் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது. மேலும் நுவரெலியா மாவட்டத்தில் மழைவீழ்ச்சி தொடர்ச்சியாக காணப்பட்டதால் நீர்வீழ்ச்சிகள் அழகாக காட்சியளிக்கின்றன. நீர்த்தேக்கப்பகுதிகளை அண்டியப்பகுதிகளிலும் உள்ள இயற்கை அழகைக்கண்டுக்களிப்பதில் உல்லாச பயணிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக