ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

புசல்லாவையில் மின்சார விநியோகம்.

புசல்லாவை கந்தலா கீழ்ப்பிரிவு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புகளுக்கு ஆம் திகதி மின்சார இணைப்பு வழங்கப்பட்டதாக இ.தொ.கா.வின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஷ் தெரிவித்தார். இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானி;ன் ஆலோசனைக்கேற்ப பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்தின் 33 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட இந்த மின்சார இணைப்பினால் 150 தொழிலாளர் குடும்பங்கள் நன்மையடையவுள்ளன. இன்று இடம் பெற்ற திறப்பு விழா நிகழ்வில் இ.தொ.கா.வின் உதவிச்செயலாளர் எஸ்.செல்லமுத்துவும் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: